பிறந்த தேதியின் மூலம் உடல் அமைப்பினை அறியும் எண் ஜோதிடம்!

நாம் பிறந்த நட்சத்திரம், ராசி, தேதி போன்றவற்றின் மூலம் நம் எதிர்காலத்தினை ஜோதிடம் மூலமாக கணிக்க இயலும். அதேபோல், நம் பிறந்த தேதியின் கூட்டுபலன் மூலமாக நமது உடல் அமைப்பினை ஒலி எண்கணிதம்(Sound Numerology) மூலமாக அறிய இயலும்.

எடுத்துகாட்டாக உங்களின் பிறந்த நாள் 12.05.1990 எனில் 1 2 0 5 1 9 9 0=27=2 7=9 இவ்வாறு ஒற்றைப்படை எண் கணக்கிட்டு கொள்ளவேண்டும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

1-பிறந்த நாளின் கூட்டுத்தொகை 1 என உடையவர் உடற்பருமனால் அவதி படுபவர்களாக இருப்பர். மேலும், இவர்கள் வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடல் எடையினை குறைத்து, உடல் நிறத்தினை அதிகரிக்கலாம்.

2-இந்த கூட்டுத்தொகையினை உடையவர்கள் உடற்பருமனுக்கு எளிதாக ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி டயட்டில் இருப்பர். இவர்கள் செய்யும் பெரிய தவறு அடிக்கடி பட்டினி இருப்பர். மேலும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என தெரியாது. இவர்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் உடற்பயிற்சியில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

3-இவர்கள் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குவர்களாக இருப்பர். இவர்கள் ஆன்மீக விஷயங்களில் நம்பிக்கை அற்றவர்களாகவும், உலகின் மீது அவநம்பிக்கையினை உடையவர்களாக தங்களின் வார்த்தைகளில் அதனை பிரதிபலிப்பர். இது அவர்களின் உடல் எடையில் பிரதிபலிக்கும்.

4-இத்தகையவர்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபட வலியுறுத்தப்படுகின்றனர். இல்லையெனில் பசியினால் உட்கொள்ளும் உணவுகள் உடலில் சேர்ந்து கொழுப்பினை அதிகரிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

5-அதிக நம்பிக்கையுடையவர்களாக இருப்பர். எனவே இவர்கள் மெலிந்த உடல் வாகினை உடையவர்கள். தங்களின் வாழ்வினை ரசித்து வாழலாம். மேலும் உடல் எடை அதிகரிப்பதனையும் தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கலாம்.

6-இந்த எண்ணை பிறந்த நாளின் கூட்டுபலனாக கொண்டவர்கள் இயற்கையாகவே சரியான உடல் அமைப்புடன் காணப்படுவர். மேலும் கட்டுப்பாட்டுடன் உணவுகளை இவர்கள் எடுத்து கொண்டால் உடல் எடையானது அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

7-இந்த எண்ணை கொண்டவர்கள் தங்களின் துணையுடன் ஏற்படும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளால் உடல் எடையானது அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் தங்களின் துணையுடன் சுமுகமான உறவினை இவர்கள் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.

8-இந்த எண்ணை உடையவர்கள் அதிகமான விஷயங்களை தெரிந்து கொள்வதாலும், கோபத்தினை மறப்பதாலும் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

9-இந்த எண்ணை கொண்டவர்கள் உடல் எடையானது அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இத்தகையவர்கள் உடல் எடையினை குறைப்பது சற்று கடினம். எனவே உடல் எடையினை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற அமிலங்கள் உள்ள பழங்களை எடுத்து கொள்ளவேண்டும்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad