பெண்களின் கடந்த கால வாழ்க்கை ஆண்களுக்கு கசக்குமா?

ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள். அதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே.

ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள்.

பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்குஉட்பட்டிருக்கிறது.

பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது. காரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான்.

பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது.

ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கருத்தில் கொண்டாலே போதுமானது. அவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.

ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது. அது ஒளிமயமாக மாற வேண்டுமானால் கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும்.

அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad