இன்று பலருக்கு குழந்தை பிறப்பு தள்ளிப்போக காரணம்

பெரும்பாலும் இன்று ஆண்களும் பெண்களும் காலம் கடந்து திருமணம் செய்துகொள்வது என்பது சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவு முறை, வாழ்வியல் முறை என்ற அனைத்தும் மாறிவிட்டது. அதனால் குழந்தையின்மை பிரச்சினை நம்முடைய முந்தைய தலைமுறைக்கு இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இன்று உள்ள அதிக எண்ணிக்கையில் இல்லை எனலாம். இன்று தோராயமாக நாற்பது விழுக்காடு அளவிற்கு இந்த பிரச்சினை அதிகரித்துள்ளது. இது இளம் தம்பதியரை மிகுந்த மன உளைச்சலுக்கும் பல குழப்பத்திற்கும், குடும்ப பிரச்சினைகளுக்கும் உட்படுத்தியுள்ளது.

சரியான புரிதலும், அதை எவ்வித பதட்டமும் இன்றி அணுகும் பொறுமையும் இருந்தால் இதை முழுமையாக அறிந்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதை தக்க மருத்துவரால் ஓரளவு என்ன பிரச்சினை, அதை எப்படி சரி செய்வது என்பதை எளிதில் அறிந்துகொள்ளமுடியும்.

ஆண்களுக்கான காரணங்கள் :

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். மேலும் கீழகண்டவற்றில் ஆண்கள் கவனமாக இருக்கவேண்டும்.

* மன அழுத்தம்
* உடல் பருமன்
* அளவுக்கு அதிகமாக குடிப்பது
* நீரிழிவு
* இறுக்கமாக ஜீன்ஸ் அணிவது
* உடலை பராமரிக்க ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது
* அதிகமாக வண்டி ஓட்டுவது
* புகைப்பிடிப்பது
* ஜங்க் உணவுகளை சாப்பிடுவது
* போதிய தூக்கம் இல்லாதது
* இறுக்கமாக உள்ளாடை அணிவது
* மொபைலை பாக்கெட்டில் வைப்பது
* நோய்த்தொற்றுகள் இருப்பது
* ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
* லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது

பரிசோதனைகள் :

ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.

விந்து அணுக்கள் எண்ணிக்கைக் குறைவு, விந்து அணுக்களின் இயக்கத் தாமதம் என இரண்டுக்குமே, உணவில் முளைகட்டிய பயறு வகைகளும், லவங்கப்பட்டை, சாதிக்காய், போன்ற நறுமணப் பொருட்களும் நிறைய சேர்க்க வேண்டும்.

தினசரி முருங்கை கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரப்பருப்பு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதும் இப்பிரச்சினைகளைக் குறைக்கக் கண்டிப்பாக உதவும்.

போகம் விளைவிக்கும் கீரைகள் எனச் சித்த மருத்துவம் பட்டியலிட்டுச் சொன்ன தாளி, முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஒன்றைக் கண்டிப்பாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். புலால் உணவைக் காட்டிலும், மரக்கறி உணவுக்கு விந்து அணுக்களை அதிகரிப்பதிலும் இதன் இயக்கத்தைக் கூட்டுவதிலும் அதிகப் பயன் உண்டு என்கின்றன இன்றைய விஞ்ஞான ஆய்வுகள்.

பெண்களுக்கான காரணங்கள் :

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

பரிசோதனைகள் :

Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால்

Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad