முத்தமிடுவதால் பரவும் வைரஸ்: எச்சரிக்கை!

இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுகையில் ஒரு தெளிவற்ற வைரஸ் பரவுவதாக சொல்கிறார்கள்.

இது பெண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மேற்படி HHV-6A வைரஸ் முத்தமிடப்படுவதால் தொற்றுவதாக இனங்காணப்பட்டது இதுவே முதல் தடவையல்ல.

ஆனாலும் அது மலட்டுத்தன்மையுடன் சம்பந்தப்பட்டிருப்பது அறியப்பட்டது இதுவே முதல் தடவை.

இவ் ஆய்வின் போது பரிசீலிக்கப்பட்ட 30 கருத்தரிப்பு பிரச்சனையுள்ள பெண்களில் 13 பேர் அதாவது 43 சதவீதத்தினரில் HHV-6A வைரஸ் இருப்பது இனங்காணப்பட்டது.

மீதி 36 ஆரோக்கியமான பெண்களில் மேற்படி வைரஸ் அவதானிக்கப்படவில்லை.

இவ் HHV-6A வைரஸ் மற்றும் அதன் குடும்பமான HHV-6B வைரஸ் ஆனவை எந்தவொரு அவதானிக்கக்கூடிய அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை.

இவ் ஆய்வில் HHV-6A வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்களிலும் Cytokines அளவு அதிகமாக இருப்பது அவதானிக்கப்பட்டது.

இவை கருக்கட்டப்பட்ட முட்டையின் வளர்ச்சியை தூண்டும் சமிக்ஞைப் புரதங்களாகும்.

அதேநேரம் Estradiol ஓமோனின் அளவும் கூடுதலாக காணப்பட்டமை, இவ் ஓமோன் HHV-6A வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகளை சந்தேகப்பட வைத்தது.

ஆனாலும் HHV-6A அல்லது HHV-6B க்கு எதிரான சிகிச்சைகள் எதுவும் தற்போது நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad