திருமண வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா?

திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே. நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர் என்றால், தினமும்

உங்கள் துணையைப் பற்றி புதிதான விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் சாகசங்களை உங்கள் திருமண வாழ்க்கை உங்களுக்கு அளிக்கும்.

ஆனால்காலம் நகரும்போது , குழந்தைகள் மற்றும் பொறுப்புகள் என வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற் படும். அப்போது காதல் என்ற அந்த தீப்பொறி மெதுவாக மறையத் தொடங்கும். உங்கள் துணையுடன் ஒரே மாதிரி யான வாழ்க்கையை வாழ தொடங்கி விடுவீர்கள். ஒரே பாட்டுக்கு நடனம் ஆடி க்கொ ண்டிருப்பதால் அதன் அனைத்து நடன அசைவுகளும் உங்களுக்கு தெரிந்தவையாக தா ன் இருக்கக்கூடும்.

அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதால், வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டி விட்டதா? அப்படியானால் உங்கள் உறவில் சில புதுமைகளையும், புத்துணர்ச்சியையும் புகுத்த வே ண்டும்.

உங்களையும் உங்கள்துணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள். ஏ தாவது காபி ஷாப் செல்லுங் கள், ஒளிந்து விளையாடுங்கள், பப் போன்ற இடங்களுக்கு சேர்ந்து செல்லுங்கள். வீட்டிற்கு சென்றால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களான குடும்பம், குழந்தைகள், பில்கள் போன்றவற் றை தவிர எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். காதலி த்த நாட்களில் எப்படி இருந்தீர்கள் என்பதை நினைவு கூர்ந்து அந்த சொர்க்க நாட்களை மீண்டும் கொண்டு வாருங்கள்.

உங்கள் காதலை சைகள், முத்தங்கள், முக்கியமாக வார்த்தைகளால் அடிக்கடி வெளிப்படுத்துங்கள்.”ஐ லவ் யூ” என கூறுங்கள். அப்படிசெய்யும் போது அவரின் கண்ணை பார்த்து சொல்லுங்கள்.

வெளியிடங்களுக்கு செல்லும் போ து உங்களின் ஸ்பரிசம் அவர் மீது அதிகம் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கைக ளைப் பற்றிக் கொள்வது, கட்டிப் பிடிப்பது, முகத்தை, கூந்தலை, கழுத்தை தொடுவது போன்றவற்றை செய்யலாம். இப்படி உடலுறவை சம்பந்தப் படுத்தாமல் அரவணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்மீது நீங்கள் கொண்டிருக் கும் நெருக்கம் அவருக்கு தெரிய வரும். வெட்கப் பட்டு ஒதுங்கி விடாதீர்கள். எப்படி ஒருவர்மீது ஒருவர் காத ல், அன்பு மற்றும் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை உங்கள் குழந்தைகள் பார்க்க வும், உணரவும் செய்யுங்கள்.

உங்கள் துணையை எதற்காக வும் புறக்கணிக்காதீர்கள். வாரம் ஒரு முறையாவது ஆச் சரியங்களை அளியுங்கள். அது எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம் – அது காதல் கடிதம் அல்லது பூச் செண்டு அல்லது வார இறு தி சுற்றுலா என எதுவாக வேண்டுமானாலும் இருக்க லாம். திடீரெனதோன்றுவ தை செய்யுங்கள்! அது மழை யில் நடப்பதாக இருக்கட்டு ம் அல்லது வேலைக்கு விடுப்பு விடுவதாக இருக்கட்டு ம் அல்லது படத்திற்கு போவதாக இருக்கட்டும். உங்க ள் உறவில் மீண்டும் அந்த பைத்தியகாரத்த னங்களை கொண்டு வாரு ங்கள்.

எதற்கும் காலம் கடந்து போ கவில்லை. உங்களுக்கு எந் தவகை நடனம் வருகிற தோ அதனை ஆடுங்கள். அது சல்சா, பால்ரூம் நடன ம் அல்லது டாங்கோ என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் கூச் சங்கள் மற்றும் தடைகளை நீக்குவதோடு மட்டுமல்லாது, உடல் மற்றும் உணர்ச்சி ரீதியா னவேறுபாடுகளை கொண்டு ள் ள நீங்கள் இருவரும் ஒன் றாக இணைய வைக்க உதவும்.

உங்கள் தோற்றத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சோ ம்பேறியாக இருக்காதீர்கள். வெளியே படத்திற்கு செல்லு ம் போதோ அல்லது படத்தி ற்கு செல்லும் போதோ உங்கள் துணையுடன் செல்லும் போது நீங்களும் அழகாக தெரிய வேண்டும் என அவர் விரும்புவார் அல்லவா? சின்ன சின்ன விஷயங்க ள் கூட அந்த காதல் பொறியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். நேரம்கிடைக்கவில்லை என்று ஏதாவது சாக்கு போக்குசொல்லாதீர்கள். இந்த சாக்குகளுக்கு ஒரு தீர்வை கண்டுபிடியுங்கள் . அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி உங்கள் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்காக தானே!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad