இறந்தவரின் ஆத்மா கண்ணாடியில் பின்னால் எப்படி மாட்டிக் கொள்கிறது தெரியுமா?

மக்களுக்கு கண்ணாடியை அடிப்படையாக கொண்டு ஏராளமான நம்பிக்கைகள் உண்டு.

கண்ணாடியை முன்னிருத்தி பல அபத்தங்களையும் கடைபிடித்து வருகிறார்கள்.

நம் பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, உடைந்தால் நமக்கு எதாவது கெட்டது நடக்கும் என்ற சிலரது நம்பிக்கை தவறானது.

இங்கே கண்ணாடி குறித்து இன்னும் வேறென்ன கற்பிதங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பிறந்த குழந்தை :
பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்துக்கு கண்ணாடியை பார்க்க கூடாது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு வருட காலத்துக்கு அவர்கள் கண்ணாடி பார்க்க கூடாது என்பது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூறப்பட்டது என சொல்லப்படுகிறது. குழந்தைகள் பிறந்து அந்த ஒரு வருடம் தவழ்வது குப்புறவிழுவது, முட்டி போடுவது என ஒவ்வொன்றாக கற்று கொள்ளும் கால கட்டம். கண்ணாடி கையில் கிடைத்தால் என்னாகும்? கீழே விழுந்து உடையும். இதனால் குழந்தைக்கு அபாயம் தானே.
(post-ads)
கண்ணாடியில் தெரியும் வருங்கால கணவன்!
தன் வருங்கால கணவன் யாரென்று தெரிய வேண்டுமாயின், ஒரு பெண் ஆப்பிளை மென்றவாறு கூந்தலை வாரிய படி கண்ணாடியை பார்த்தால் அவளின் வருங்கால கணவனின் முகம் அவள் தோளுக்கு பின்னால் நிற்பது போல கண்ணாடியில் தெரியும். பழைய காலத்தில் இங்கிலாந்து நாட்டில் ஹலோவீன் நாளன்று இளம்பெண்கள் கயிற்றில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும் ஆப்பிளின் தோலை வாயால் உரித்து எடுக்க, அது கீழே விழுந்து ஒரு கண்ணாடி மூலமாகப் பார்த்தால் அது எதேச்சையாக ஏதோ ஒரு எழுத்து வடிவத்தை ஒத்திருக்குமாம். அது வருங்கால கணவன் பெயரின் முதல் எழுத்து என நம்பப்பட்டது. அதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அது நாளாக நாளாக மேற்குறிப்பிட்ட நம்பிக்கையாக உருவெடுத்து உள்ளது.

அம்மை நோய் தாக்கியிருக்கும் போது கண்ணாடி பார்க்க கூடாது
அம்மை நோயின் போது கண்ணாடியை பார்த்தால் நோய் இன்னும் கொடுரமாகும். இந்த நம்பிக்கை உருவான விதம் அனுபவத்திலிருந்து எழுந்தது. அம்மை நோயின் போது முகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் கொப்பளங்கள் உருவாகி இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் கண்ணாடியில் முகத்தையும் உடலின் மற்ற பாகங்களையும் பார்த்தால் கை சும்மா இருக்குமா? கண்டிப்பாக கொப்பளங்களை கிள்ள செய்யும். இதனால் அம்மை நோயின் தாக்கம் இன்னும் அதிகமாகும். வலியும் அதிகரிக்கும். எனவே தான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டன.

 வாசலில் கண்ணாடி கூடாது :
 வீட்டு வாசலில் கண்ணாடியை வைத்தால் கெட்ட ஆவிகள் பேய் பிசாசுகள் வராது என்ற நம்பிக்கையின் பின்புலம் சீனாவில் துவங்கியிருக்கிறது. சீனர்களின் எல்லா குடியிருப்புகளின் வாசலில் எல்லாமே கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். என்னவென்று ஆராய்ந்தால் எல்லாமே சீன வாஸ்துசாஸ்திரம்தான். அதாவது கெட்ட சக்திகளை திசை திருப்ப வாசலில் வைக்க படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அதாவது வீட்டின் சில இடங்களில் கண்ணாடி வைக்கலாம் சில இடங்களில் வைக்க கூடாது. எல்லாவற்றுக்கும் காரணம் வீட்டின் மூலைகள் பூமியின் காந்த திசைகளை வைத்து கட்டப்படிருப்பதாகவும் அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி அதிர்வலைகளை உண்டாக்கி நல்ல கெட்ட சக்திகளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

கண்ணாடியில் மாட்டிக் கொள்ளும் ஆத்மா :
ஒருவர் இறந்து விட்டால் அவரின் வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் கண்ணாடியை துணிகளை கொண்டு மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் இறந்தவரின் ஆத்மா வெளியே செல்ல முடியாமல் கண்ணாடியின் பின்னால் மாட்டி கொள்ளும். பிம்பத்தின் பிரதிபலிப்பு எப்படி உருவாகுகின்றது என்பதன் அடிபடை தெரியாமல் இருந்ததன் விளைவாக கண்ணாடிக்கு பின்னால் இன்னொரு உலகம் இருப்பது போன்ற ஒரு கற்பனை நம்பிக்கையாக உருவாகி இருக்கலாம். ஆனால் கண்ணாடி ஒளியை உள்வாங்காத ஒரு பொருள் என்பதுதான் நிஜம்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad