திருமணமான புதிதில் கணவன் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் சொல்லும் விசயங்கள் இதுதான்!!!

திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். ஆரம்பத்தில் அழகு சார்ந்திருக்கும் இவை, முதிர்ச்சி அடைந்த பிறகு மனம் சார்ந்து மாற ஆரம்பிக்கிறது.

அனைவருக்கும், அவர்கள் விரும்பியவாறு துணை அமைவதில்லை. ஆகவே, திருமணதிற்கு பிறகு மீண்டும் இந்த பட்டியல் தூசுத் தட்டப்பட்டு, அதில் ஒருசில மாற்றங்கள் ஏற்படுத்தி, திருமணத்திற்கு பிறகு நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். இப்படி எல்லாம் இருந்தால் தாங்கள் சந்தோசமாக இருப்போம் என பெண்கள் சில விஷயங்கள் வைத்திருக்கின்றனர்.

அதில், அவர்கள் கூயிருக்கும் பத்து விஷயங்கள் குறித்து இனிக் காண்போம்...
(post-ads)
விஷயம் #1 உதவி செய்யனும்! பசங்க வேலை, பொண்ணுங்க வேலை என்று பேதம் பார்க்க கூடாது. சமையலாக இருந்தாலும், சரி, துணி துவைப்பதாக இருந்தாலும் சரி.

விஷயம் #2 டென்ஷன்! வேலை இடத்தில் இருக்கும் டென்ஷனை தங்கள் மீது காண்பிக்கக் கூடாது. இது எங்களை மனதளவில் எவ்வளவு பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #3 அரவணைப்பு! எப்போதும் தங்கள் மீது ஓர் அரவணைப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் தங்கள் மீது ஒரு சதவீதம் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #4 ஓபன்! திறந்த மனதுடன் பேசுகிறேன் என சொல்லி, மனம் வந்தும்படி பேசக் கூடாது. சில விஷயங்கள் நீங்கள் தமாஷாக பேசினாலும், அந்த வார்த்தை எங்களை எவ்வளவு வேதனை படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #5 பொறுப்பு! கல்யாணம் ஆகிவிட்டது என்ற பொறுப்பு இருக்க வேண்டும். குடும்ப தலைவன் என்பது போல இருக்க வேண்டும்.

விஷயம் #6 நண்பர்கள்! நண்பர்களுடன் மட்டும் நேரம் செலவழிக்காமல், தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். உங்களை போல நாங்களும் தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவு வந்தால் கதவு திறந்து விடுவீர்களா?

விஷயம் #7 தண்ணி, தம்மு! முன்பு எப்படி இருந்தாலும் ஓகே, திருமணத்திற்கு பிறகு தண்ணி, தம்மு போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

விஷயம் #8 கால் அட்டன்ட்! எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒருமுறை கால் அட்டன்ட் செய்து என்ன எது என்றி சொல்லிவிட்டால் நிம்மதி. நீங்கள் தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்குள் ஏற்படும் பயத்தை சற்று யோசித்து பாருங்கள்.

விஷயம் #9 இன்ப அதிர்ச்சி! உணவு, உடை, பரிசுகள் என அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தர வேண்டும். விலையுயர்ந்த பொருட்கள் தான் வேண்டுமென்று இல்லை. எங்கள் மனதிற்கு பிடித்தவையாக இருந்தாலே போதுமானது.

விஷயம் #10 பில் கட்டுவது, காய்கறி வாங்கி வருவது என சில வேலைகளை தாமாக முன்வந்து செய்துக் கொடுக்க வேண்டும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad