காதல் கணவனை வசியப்படுத்த பெண்கள் செய்யும் தந்திரங்கள்!!

அனைத்து பெண்களுக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்று தான் பெண்களுக்கு ஒரே குழப்பமாக இருக்கும். இந்த பகுதியில் கணவனின் அன்பை முழுமையாக பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.

கணவன், மனைவி இருவரும் பிஸியான வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை. தினமும் உங்களது கணவரிடம் ஐ லவ் யு சொல்லுங்கள்…! அவருக்கு இது தன்னம்பிக்கையையும், உங்கள் மீதான காதலையும் அதிகரிக்கும்.

தினமும் உங்களது கணவர் அலுவலகத்திற்கு செல்லும் போது, ஒரு ஆசை முத்தம் கொடுத்து அனுப்பி வையுங்கள். இது அவரது நாள் உற்சாகமாக அமையவும், அலுவலகத்தில் கூட உங்களை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கவும் உதவியாக இருக்கும்.

உங்களது கணவர் எடுக்கும் முடிவுகளின் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் ஏதாவது கூறினால் சரியாக தான் இருக்கும் என்று நம்புங்கள். ஒருவேளை அது தவறாக இருந்தால், அன்புடன் மென்மையாக எடுத்துக்கூறுங்கள்.

கணவரிடம் எங்க அம்மா வீட்டில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா என்று பெருமையாக பேசாதீர்கள். பெறுமை பேசியே ஆக வேண்டும் என்றால், உங்கள் அம்மாவின் வீட்டில், என் கணவர் என்னை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்று தெரியுமா…? என்று பெருமை பேசுங்கள். இதுவரை நன்றாக பார்த்துக்கொள்ளவில்லை என்றாலும் கூட, இதை கேட்டதும் உங்களை ராணி மாதிரி வைத்து பார்த்துக்கொள்வார்.

உங்கள் கணவரிடம் குழந்தை தனமாக பேசுங்கள்.. விளையாடுங்கள்.. நீங்கள் இவ்வாறு செய்தால் அவர் அத்தனை பிரச்சனைகளையும் மறந்து, குஷியாகிவிடுவார். அவரது மன இறுக்கம் குறையும்.

உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களை பற்றி உங்களது கணவரிடம் குறை கூறுவதை முடிந்த வரை தவிர்க்கவும். அப்படியே அவர்கள் செய்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்றாலும், மென்மையாக கூறி புரிய வையுங்கள். சட்டென குறை கூறிவிட்டால், உங்களது கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறையும். மென்மையாக கூறினால், மாமியார், நாத்தனார் உங்களுடன் சண்டை போட்டால் கூட உங்கள் கணவர் உங்கள் பக்கம் இருந்து பேசுவார்.

சண்டை இல்லாத குடும்பமே இல்லை.. எனவே உங்களுடன் கணவர் சண்டையிட்டுவிட்டால், அதையே மனதில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டாம். சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு வழக்கம் போல இருங்கள். கட்டிப்பிடி வைத்தியம்! கட்டிப்பிடி வைத்தியத்திற்கு அதிக பலன் உண்டு. எனவே உங்களது கணவரை அடிக்கடி ஆசையுடன் கட்டிப்பிடியுங்கள். இது உங்களது உறவுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad