தாம்பத்திய வாழ்க்கையில் தம்பதிகள் செய்யும் 8 தவறுகள் பற்றி தெரியுமா..?

தாம்பத்தியம், கருவளம், கருத்தரிப்பு, தாம்பத்திய உறவில் கருத்தடைக்கு பயன்படுத்தும் கருவிகள் என உடலுறவு சார்ந்தவற்றில் தவறுகள் பல நிகழும்.

இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் தாம்பத்தியத்தில் சோர்வு இல்லாமல் இருக்கும். தாம்பத்தியம் என்பது எல்லா உயிர்களுக்கும் தேவைப்படும் அடிப்படை விஷயம்.

எனவே, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது தவறாகாது. ஆனால், தாம்பத்தியத்தில் உண்டாகும் தவறுகளை திருத்திக் கொள்ளாமல் ஈடுபடுதல் இல்வாழ்க்கையில் விரிசல் விழ கூட காரணியாக அமையலாம்.

ஒருவரது தாம்பத்திய வாழ்க்கை சோர்வாக, மந்தமாக இருக்கிறது எனில், அவர்கள் இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்...

தவறு #1
பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறு இது. தாம்பத்தியம் என்பது வெறுமென உடல் ரீதியாக மட்டும் இணைதல் அல்ல. பேச்சாலும், உங்கள் தீண்டல்களாலும் ஃபோர் ப்ளேவில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியம். ஃபோர்ப்ளே இல்லாமல் ஈடுபடுதல் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சீக்கிரம் போரடிக்க செய்திடும்.

தவறு #2
தாம்பத்தியத்தில் ஈடுபடா நீங்களாக அழைக்க எப்போதும் தவறக் கூடாது. கணவன், மனைவி யாராக இருப்பினும், தங்கள் துணை இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என எண்ணுவர். இது தான் தாம்பத்திய உறவில் சுவாரஸ்யத்தை கூட்டும்.

தவறு #3
தாம்பத்திய உறவில் உச்சம் அடைந்த உடன், அல்லது செக்ஸ் முடிந்தவுடன் துணையைவிட்டு விலகிட வேண்டாம். அதன் பிறகு உங்கள் துணையுடன் பேச துவங்குங்கள். இதை தவிர்த்தல் மிகப்பெரிய தவறு. பெண்கள் இதை அதிகம் எதிர்பார்கின்றனர்.

தவறு #4
செக்ஸில் ஈடுபடும் போது கவர்ச்சியாக பேசுகிறேன் என டர்ட்டியாக பேச வேண்டாம். ஓரிருமுறை என்றால் பரவாயில்லை, ஒவ்வொரு முறையும் இணையும் போது இப்படி பேசுதல் உங்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றலாம்.

தவறு #5
தாம்பத்தியத்தில் இணையும் ஒருவர் மட்டும் சிறந்து செயற்படுதல் போதாது. கணவன், மனைவி இருவருக்கும் சம அளவில் நாட்டம் இருக்க வேண்டும். ஒருவருக்கு நாட்டம் இல்லாமல், ஒருவரின் விருப்பத்திற்கு மட்டும் தாம்பத்திய உறவில் இணைவது உறவில் மந்த தன்மை அதிகரிக்க செய்யும்.

தவறு #6
ஏதோ துணையின் விருப்பத்திற்கு இணங்க உடலுறவில் ஈடுபடுவது போல காண்பித்துக் கொள்ள வேண்டாம். இது, மீண்டும் உங்களுடன் உறவில் ஈடுபட விருப்பம் குறைய செய்யலாம்.

தவறு #7
ஒவ்வொரு நபருக்கும் தாம்பத்தியத்தில் ஒவ்வொரு ஆசை இருக்கும். ஆனால், சிலர் தங்கள் துணையின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர மாட்டார்கள். இந்த தவறை ஆண், பெண் இருவரும் செய்வதுண்டு. அதே போல, உங்கள் துணை பிடிக்கவில்லை என அழுத்தமாக கூறும் விஷயத்திற்கு கட்டாயப்படுத்துவதும் தவறு.

தவறு #8
ஒவ்வொரு முறையும் உடலுறவில் விருப்பமின்றி ஈடுபடுதலும் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணியாக அமையலாம். அதே போல, இப்போது உடலுறவில் ஈடுபட விருப்பம் என்றால்.. அதையும் நேரடியாக கூறிவிடுங்கள். துணை கோபித்துக் கொள்வார் என்பதற்காக ஆர்வமின்றி உடலுறவில் ஈடுபட வேண்டாம்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad