இரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா? அவதானம்! பெண்களால் தொல்லை..

இரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..?

துலாம்

துலாம் ராசியில் பிறந்த பலருக்கு இரண்டு தாரப்பலன் அமையும் நிலை ஏற்படுகின்றது. இது ஜோதிட நூல்களிலும் கூறப்பட்டு இருக்கின்றன.

துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்சிகம் ராசியிலேயே சந்திரன் நீசபங்கம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு காரணமாகின்றது.

சித்திரை, சுவாதி, விசாகம் எனும் நட்சத்திரங்களின் அதிபதிக் கிரகமான செவ்வாய், ராகு, குரு என்கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு காணணமாகின்றது.

எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகின்றது.

ஆனால் இது முழுதாக அனைத்து துலாம் ராசிக்கும் அமையாது. மேற்கூறிய குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.

இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் களத்திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலையில் அமைவதும், களத்திரஸ்தான நிலைக்கு உரிய கிரகம் நீசபங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.

அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.

சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்தாலோ அல்லது பார்வை பெற்றாலோ பெண்களால் தொல்லை அவமானம் ஏற்பட்டு, கணவன், மனைவி மனக் கசப்புகள் அமையும்.

சூரியன், செவ்வாய் சேர்க்கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் பிரிவுகளைக் கொடுக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது.

எனவே மூலம், மகம், சுவாதி, சித்திரை, கார்த்திகை, பூசம், பூரம், ஆயிலியம், ரோகினி போன்ற நட்சத்திரம் கொண்ட ஆண், பெண் இருபாலாரும் அவர்களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டியது மிக முக்கியமாகும்.

ஆண் ஜாதக அமைப்பில் களத்திரகாரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்பதும் குடும்பஸ்தான அதிபதி பலவீனமடைந்து இருப்பதும் முதல்தார மனைவியின் சகோதரியே இரண்டாம்தார மனைவியாக அமையும் நிலை ஏற்படும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad