முத்தத்தின் அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா?

முத்தம்.. முத்தம்.. முத்தம்...இந்த வார்த்தையினை உச்சரிக்கும்போது நமது உதடுகள் எவ்வாறு ஒன்றிணைகிறதோ, அதே போன்று தான் முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் அவர்களின் இரு இதயங்களும் சங்கமிக்கின்றன.

காதலை வெளிப்படுத்த உதவும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மொழி என்று கூட சொல்லலாம்.

காதலர்களுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் போன்றவற்றிற்கு முட்டுக்கட்டை போடும் இந்த முத்தத்தை கொடுப்பதிலும் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்களை சுண்டியிழுத்து, மனதில் என்றும் நீங்கா வண்ணம் இருக்க வேண்டும்.

அந்த அளவுக்கு உணச்சிரசம் பொங்க, ஆரவாரம் எதுவும் காட்டாமல் மிகவும் அமைதியான முறையில் முத்தமிடுங்கள்.

உங்கள் காதலியிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டே இருங்கள், அந்த பேச்சில் ஒருவித ரொமான்ஸ் இருக்க வேண்டும். இதுவே அவர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும்.

ஒரு கட்டத்தில் இந்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும் பட்சத்தில், நீங்கள் கொடுக்கும் முத்தம் அவர்களது மனதில் நச்சென்று நங்கூரம் போட்டு உட்கார்ந்துவிடும்.

அதுசரி, முத்தம் கொடுக்கும் இடங்களும் அதற்கான அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா?

உதட்டில் முத்தம்

உதட்டில் கொடுக்கும் முத்தத்தில் தான் அதிக உணர்வுகள் மேலோங்குகிறது.

இதற்கு நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தம் ஆகும்.

கைகளில் முத்தம்

கைகளில் கொடுக்கும் முத்தம் மதிப்பின் பரிமாணத்தை எடுத்துரைக்கிறது.

இந்த முத்தத்தை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் கூட தங்களை விட சிறுவயதினருக்கு கொடுப்பார்கள்.

கண்களை திறந்து முத்தம்

முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பதுடன், உங்களை உணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம்.

கண்களை மூடி கொடுப்பது

காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம் ஆகும்.

கன்னத்தில் முத்தம்

கன்னத்தில் முத்தமிட்டால், நாம் இருவரும் நல்ல காதலர்கள் என்பதையும் தாண்டி, நான் உன்னுடன் நல்ல நட்புறவுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம் ஆகும்.

கழுத்தில் முத்தம்

அருகில் நெருங்கி வந்து கட்டியணைத்து கொடுக்கும் முத்தம் செம ரொமண்டிக்காக இருக்கும்.

நீ எனக்கு வேண்டும் என்பதையே இந்த முத்தம் குறிக்கிறது. இந்த முத்தத்தை புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியர் பரிமாறிக்கொள்வார்கள்.

கண்களில் முத்தம்

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தம் ஆகும்.

நெற்றியில் முத்தம்

இந்த முத்தம் பொதுவான ஒன்று. இவ்வகை முத்தத்தை அனைத்து வயதினரும் பரிமாறிக்கொள்வார்கள்.

நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad