சுண்டி இழுக்கும் அழகுடன் கேரளத்து பெண்கள் இருக்க இதுதான் காரணமாம்…!

கேரளத்து பெண்கள் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது, நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் தான். அதுமட்டுமின்றி, அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும். இதற்கு அவர்களின் அழகு பராமரிப்பு தான் காரணம்.

இவர்கள் எக்காரணம் கொண்டும் கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்தமாட்டார்கள். எதற்கும் இயற்கைப் பொருட்களையே நாடுவார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது. சரி, அவர்கள் அப்படி என்ன பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள்.

தேங்காய் எண்ணெய்
கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

கடலை மாவு
மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

மஞ்சள்
கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, அவர்கள் மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

கற்றாழை
முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

காஜல்
கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

செம்பருத்தி
கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இது தான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்கு பதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

கறிவேப்பிலை
கேரளத்து பெண்கள் பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

சிவப்பு சந்தனம்
இது தான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

சிகைக்காய்
மலையாள பெண்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தியைப் போல், சிகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad