இந்த ராசிக்காரர்களை கோபமான நேரத்தில் தீண்டாதீங்க!! அப்புறம் ஆபத்து உங்களுக்கு தான்

ஜாதக ரீதியாக பார்க்கையில் சில ராசிக்காரர்களுக்கு அளவுக்கு அதிகமாக கோவம் வரும். கோவம் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்களை சமாதானம் செய்ய செல்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் எந்த ராசிக்கார்களுக்கெல்லாம் அதிகப்படியான கோவம் வரும் என்று பார்ப்போம் வாருங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்கார்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வெல்வதென்பது சாதாரண விடயமல்ல. அதிலும் இவர்கள் கோபத்தில் இருக்கும்போது மற்றவர்கள் என்ன சொன்னாலும் அது இவர்களின் காதில் விழவே விழாது.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடித்து பேசுவார்கள். வார்த்தையால் மட்டும் அல்ல தேவை பட்டால் கையாளும் அடித்து பேசுவார்கள். இவர்கள் கோவமாக இருக்கும் சமயங்களின் இவர்களிடம் தேவை இல்லாமல் வாயை கொடுப்பது மற்ற ராசிகாரர்களுக்கு நல்லதல்ல.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மென்மையாக பேசி பழகுபவர்களாக இருந்தாலும் கோவம் என்று வந்துவிட்டால் அவர்களை மற்றவர்கள் கட்டுபடுத்துவது கடினம்.

உடல் அளவிலும் இவர்கள் வலிமையாக இருப்பதால் கோபமான சமயங்களில் இவர்களை ஜாக்கிரதையாக தான் அணுக வேண்டும். அதோடு இவர்கள் பழி தீர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கார்கள் பொதுவாகவே தைரியசாலிகளாக இருப்பார்கள். அதோடு இவர்களுக்கு கோவம் என்று வந்துவிட்டால் இவர்களின் தைரியம் பன் மடங்கு அதிகரிக்கும்.

இவர்களை யாரவது அவமானப்படுத்திவிட்டால் அதற்காக இவர்கள் ஒன்று பழிக்கு பழி வாங்குவார்கள் இல்லை அவர்களை சுத்தமாக வெறுத்து ஒதுக்கிவிடுவார்கள். இவர்களின் கோவம் சில நேரங்களில் தவறாக இருந்தாலும் அதை இவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

தனுசு
தனுசு ராசிக்கார்கள் மற்றவர்களை தங்கள் நாவினாலே காயப்படுத்திவிடுவார்கள். கோவமான சமயங்களில் இவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் எதிரில் நிற்பவர்களை ஈட்டி போல குத்தும்.

ஆனால் கோவம் போன பிறகு தாங்கள் பேசிய வார்த்தைகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பதிலும் இவர்களை மிஞ்ச ஆள் இல்லை.

மகரம்
மகர ராசிக்கார்கள் பொதுவாக எதையுமே தீவிரமாக செய்பவர்கள். அதே போல தான் பழிவாங்கிவதையும் இவர்கள் தீவிரமாக செய்வார்கள். தனக்கு யாராவது இன்னல்களை விளைவித்தால் அவர்களை பழி வாங்கும்வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.

ஆனாலும் இவர்களிடம் மற்றவர்கள் மன்னிப்பு கேட்டால் இவர்கள் எளிதில் மன்னித்துவிடுவார்கள். இது பொதுவான ராசி பலன் தான். ஒவ்வொருவருடைய ஜாதகத்தை பொறுத்து இதில் மேலும் சில மாறுதல்கள் இருக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad