திருமணமான புதுமண தம்பதிகள் கட்டாயம் முதலில் இதை படிங்க..!!

ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரை ‘சுபமுகூர்த்த நாட்கள்’!
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரை ‘சுபமுகூர்த்த நாட்கள்’!

ஆம்! ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும்.

வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆண், பெண் கலவி நடந்தால்தான்விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.

அதற்குத்தான் இந்த நாட்களை சுபமுகூர்த்த நாட்கள் என்று சொன்னேன்!சரி, எல்லாமே முறைப்படி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும். இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து, அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.

கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள்.

பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள்.

இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’ மோதிப்பார்ப்பார்கள்.

ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad