ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன தெரியுமா? இருமனங்கள் இணைவது தான் காதல். அப்படி காதல் செய்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை ஒருசிலவற்றை வைத்து தான் தேர்ந்தேடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் போது பார்ப்பது இரண்டு தான். அவை தான் அகஅழகு மற்றும் புறஅழகு.
இதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களிடம் புறஅழகைப் பார்ப்பதைவிட, அவர்கள் எதிர்ப்பார்ப்பது மற்ற மூன்று விஷயங்களை மட்டும் தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அந்த மூன்று விஷயங்கள் சரியாக இருந்தால் தான் வாழ்க்கையானது சந்தோஷமாக, நீண்ட நாட்கள் நிலைக்கும் என்றும் கூறுகின்றனர். அதை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…
1. ஆண்கள் குழந்தை போன்றவர்கள். அவர்கள் எதையும் சரியாக யோசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நிறைய பாசத்தை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் காதலிப்பவர்கள், தனது மனதை சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, தன்னை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய, எந்த வகையிலும் தன்னை ஆதரவாக இருப்பவளான ஒரு பெண்ணையே எதிர் பார்ப்பார்கள். உதாரணமாக, காதலனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்.
அதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் விளையாடுவார்கள் என்றால், அப்போது காதலியும் அவனுடன் சென்று அவன் விளையாடும் போது, அவனை ஊக்கப்படுத்தினால், அது அவர்களுக்கு மிகுந்த பாசத்தை உண்டாக்கும். இது போல அவர்களது சிறு சிறு செயல்களில் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனதிற்கு ஆதரவாக இருந்தால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய குணத்தையே பெரிதும் பார்ப்பார்கள்.
2. ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்தினால், அப்போது அவர்கள் அழ நேரிடும். பிறகு அது ஆண்களுக்கே பெரும் மைனஸ் ஆக மாறிவிடும். ஆகவே அவர்கள் தங்கள் உணர்ச்சியான பாசத்தை வெளிப்படுத்தும் போது காதலியானவள் புரிந்து கொண்டு, அவர்களது உணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவர்கள் வெளிப்படுத்தும் போது அது சற்று கோபம் போன்று இருக்கும். ஆகவே அதைப் புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் இருவருக்கும் இருக்கும் பாசமானது ஆழமாக நீண்ட நாட்கள் இருக்கும்.
3. ஆண்களுக்கு தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவரையே பிடிக்கும். உதாரணமாக, காதலன் ஆசையாக சமைத்துக் கொடுக்கும் போது, காதலியானவள் சமைத்த உணவின் சுவையை மட்டும் பாராட்டி பேசக் கூடாது. மாறாக, அவன் உங்கள் மீது உள்ள பாசத்தால், யாருக்காகவும் செய்தாததை உங்களுக்காக செய்கிறான் என்பதை உணர்ந்து, அவன் பாசத்தை பற்றியே அவனிடம் பேச வேண்டும்.
இவ்வாறு உணர்ந்து பேசும் பெண்களையே அவர்களுக்குப் பிடிக்கும். ஆகவே ஆண்கள் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்கின்றார்கள் என்றால், அப்போது பெண்ணிடம் இருக்கும் புற அழகைப் பார்ப்பதை விட அக அழகான மேற்கூறிய மூன்று விஷயங்களையே ஒவ்வொரு ஆண்களும் தாம் காதலிக்கும் பெண்ணிடம் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.