பெண்கள் எந்த ராசி ஆண்களைத் துரத்தி துரத்தி காதலிப்பார்கள் தெரியுமா?

நாங்களும் நல்லா தானடா இருக்கோம், எங்கள ஒருத்தியும் பாக்க மாட்றா? என்று சுப்ரமணியபுரம் சசிகுமாரை போல் ஃபீல் பண்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான விடை. இதுக்கு எல்லாம் அவங்க பிறந்த ராசி தான் காரணமாம்!
ஒவ்வொருவர் பிறக்கும் போதும் அவர்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் ராசியை வைத்து அவர்களது முழு வாழ்க்கையையும் கணிக்க முடியும் என்கிறது நமது ஜோதிடம்.

வாழ்க்கை என்பது அவர்களுடைய தோற்றம், பேசும் திறன், பழகும் பண்பு போன்றவை. அதில் குறிப்பிட்ட ராசியில் பிறந்த ஆண்கள் அவர்களது அழகான ஆளுமை, நடத்தை, பேசும் பண்புகளின் மூலம் பெண்களை அதிகம் கவரக்கூடியவர்களாம். சரி, அதில் உங்கள் ராசியும் இருக்கிறதா என்று பாக்கலாமா?

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் கவர்ச்சிகரமானவர்கள்

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த ஆண்கள் பார்ப்பதற்கு வசீகரமான தொற்றத்தை கொண்டவர்களாகவும், பெண்களின் கவனத்தை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் அவர்களது கடைக் கண் பார்வை மூலமே ஈர்க்கக் கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.
இவர்களைச் சுற்றி எப்பொழுதும் அன்பையும், பாசத்தையும், காதலையும் பொழியும் பெண்கள் இருப்பார்களாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் காதல் மன்னனாக வலம் வருவார்களாம். மேலும் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாகவும், தனது பேச்சுத் திறனால் அனைவரையும் கவரக் கூடியவர்களாகவும், பெண்களின் மனதைப் படிக்க தெரிந்தவர்களாகவும் இருப்பார்களாம். இந்தப் பண்புகளினால் பெண்களைக் கவரும் ஆண் ராசிகளின் வரிசையில் முதலில் இருப்பது மிதுனம்.

சிம்மம்
அடுத்த இடத்தில் இருப்பது சிம்ம ராசி ஆண்கள். மற்றவரைப் புரிந்து நடப்பதிலும், உறவுகளை வலுப்படுத்துவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாம்.
இயற்கையாகவே சிம்ம ராசியில் பிறந்தவர்கள் செல்வாக்கு கொண்டவர்களாகவும், அடக்கமானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் பெண்களிடம் வழிந்து பேசும் போதும் அதுவும் பல பெண்களுக்குப் பிடிக்கும் வகையில் அளவாகப் பேசும் திறமை படைத்தவர்களாம்.
குறிப்பாகப் பெண்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்கக் கூடியவர்கள் இந்த ராசியில் பிறந்தவர்கள். இதைத் தவிர ஒரு லட்சிய பிடிப்புடன் இருக்கும் இவர்களது இயல்பு பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

துலாம்
அடுத்த இடத்தில் இருப்பது துலாம் ராசி ஆண்கள். பெண்களுடனான உறவுகளை இவர்கள் மதித்து நடப்பதைப் பார்த்தே பல பெண்கள் இவர்களை விரும்புவார்களாம்.
பேச்சு திறமையும் இவர்களுக்குக் கொஞ்சம் அதிகம் தானாம், மேலும் இவர்கள் காதலிக்கும் பெண்ணை மற்றவர்கள் போறாமைப் படும் அளவிற்கு உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார்களாம்.
இவர்களிடம் பேசினால் அனைத்தையும் மறந்து இவர்களது பேச்சிற்கே அடிமையாகி விடுவோமாம், இதுவே இந்த ராசியைப் பெண்களை கவரும் ராசிகளின் பட்டியலில் இடம் பெற வைத்துள்ளது.

மேஷம்
நான்காவதாக இருக்கும் ராசி மேஷம். மேஷ ராசி ஆண்கள் அனைவரையும் கவரும் முக அமைப்பும், உடல் தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுடைய இந்த வசீகரமே பல பெண்களை இவர்களை நோக்கி இழுக்குமாம். இவர்கள் ஒரு தலை சிறந்த காதலர்களாம், ரசித்து ரசித்துக் காதல் செய்யக் கூடியவர்கள் மற்றும் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர்களும்.
மேஷ ராசி ஆண்கள் கவர்ச்சிகரமானவர்களாக மட்டும் இல்லாமல் புத்திசாலிகளாகவும் இருப்பவர்கள் என்பதால் இது அவர்களுக்குக் கூடுதல் பலம்.
ராசி என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்கள் மத்தியில் எப்படி முன் நிறுத்துகிறோம் என்பதிலேயே அவர்களது கவர்ச்சி அடங்கியுள்ளது.
நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் சரி பெண்களை அதிகம் கவரும் ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன், பெண்களை மதியுங்கள்.
காதலியாக, தோழியாக, சக மனிதியாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், இதுவே பெண்களை அதிகம் கவரும் ஒன்றாகும்.
தனக்கும் தனது கனவு மற்றும் எண்ணங்களுக்கு மரியாதை கொடுக்கும் எந்த ஆணையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad