திருப்பதியில் உள்ள தங்கக் கிணற்றின் மர்மங்கள் பற்றி தெரியுமா?

திருப்பதி ஏழுமலையானின் அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் நாம் ஏற்கனவே பல கட்டுரைகளில் பார்த்திருப்போம்.

அதுமட்டுமின்றி ஏழுமலையானின் எண்ணிலடங்கா மகிமைகளை சொல்லிக்கொண்டே போகலாம் போலிருக்கிறது. ஆம். திருப்பதி கோயில் இருக்கும் திருமலையின் அருகே இரண்டு தங்கக் கிணறுகள் இருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சரி திருமலை தங்கக் கிணறு பற்றிய மர்மங்களை இந்த பதிவில் காணலாம்

33 வருடங்களுக்கு முன்பு திருமலை தங்க கிணறு குறித்து பார்ப்பதற்குமுன், ஒரு சில தகவல்களைப் பார்ப்போம். அதாவது கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு முன் இந்த தங்க கிணறு அரசால் மூடப்பட்டது. இந்த கிணற்றில் இருக்கும் நீர் உபயோகப்படுத்த உகாதது எனக்கூறி முற்றிலுமாக கைவிடப்பட்டது இந்த கிணறு.

2007ல் நடந்த அதிசயம் 23 வருடங்கள் மூடப்பட்டிருந்த கிணறு பாழடைந்து கிட்டத்தட்ட எதற்குமே லாயக்கற்றதாகிப் போனது. பின்னர் 2007ம் ஆண்டு திருமலையான் மகிமை காரணமாக அந்த கிணற்றிலுள்ள நீர் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறிவிட்டதாம்.

ஏழு சிகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

முனிவர் ஏழுமலையானே மனித உருவில் அவதரித்ததாகவும், அவரே இந்த கோயிலைக் கட்டச் சொன்னதாகவும், முனிவர் ஒருவர் கூறினார்.

தொண்டைமான் வம்சம் தொண்டைமான் வம்சத்தினரே, திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அலங்கரித்ததாகவும், அந்த வம்சத்திலேயே திருமலையான் மனிதராக அவதரித்ததாகவும் ஆந்திர மாநில மக்களிடையே பேச்சு இருக்கிறது.

தங்கக் கிணறு தற்போதுள்ள கிணற்றைப் போலல்லாது. இந்த தங்கக் கிணறு தொண்டைமான் காலத்தில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாம். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கிணறு இது ஒன்றுதான் என்கின்றனர் பக்தர்கள்

படிக்கிணறு படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு படிக்கிணறு என்றழைக்கப்படுகிறது. மனித பிறவி எடுத்த திருமலையான் இந்த கிணற்றில்தான் நீர் எடுத்து பூசைக்கு பயன்படுத்துவாராம்.

ஏழு சிகரங்கள் ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், திருமலையில் ஏழுமலையானுக்கு அபிசேகம் நடைபெறும். இந்த அபிஷேகம் தங்கக் கிணற்றில் இருந்து வரும் நீரால் செய்யப்படுகிறது

எப்படி செல்லலாம் நாட்டின் பல திசைகளிலிருந்தும் இயக்கப்படும் ரயில் சேவைகளை கொண்டதாக திருப்பதி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் பெரிய ரயில் சந்திப்பான ரேணிகுண்டாவும் திருப்பதிக்கு அருகில் 10 நிமிடபயண தூரத்தில் உள்ளது. மற்றொரு முக்கியமான ரயில் சந்திப்பான கூடூர் இங்கிருந்து 84 கி.மீ தூரத்தில் உள்ளது. எனவே யாத்ரீகர்கள் ரயில் மூலமாக திருப்பதிக்கு வருவது மிக எளிதாகவே உள்ளது.

திருப்பதி பாலாஜி கோவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோவில் எத்தனை பிரசித்த பெற்றது என்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிக அதிகமாக பார்க்கும் புனித ஸ்தலங்களில் திருப்பதி முதன்மையானது. திருப்பதி கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்

திருப்பதி பாலாஜி கோவில் அன்று பரவலாக இருந்த திராவிட பாரம்பரிய கலையம்சத்தை கொண்டு கட்டப்பட்டது திருப்பதி கோவில். பாலாஜி கடவுளின் சிலையில் அவரின் முடியில் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.

திருப்பதி பாலாஜி கோவில் 1800’களில், 12 பேர் கோவிலுக்குள் சில தீய செயல்களை செய்ததன் விளைவாக திருப்பதியை ஆண்ட அரசன் அவர்களை தண்டித்து கோவிலை 12 ஆண்டுகளாக மூடிவிட்டான்.

திருப்பதி பாலாஜி கோவில் உலகிலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் திருப்பதி டாப் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. தினசரி 50,000 முதல் 100,000 பக்தர்கள் வருகின்றனர்; சிறப்பு நாட்களில், ப்ரம்மோற்சவம் போன்ற பண்டிகைகளில் ஐந்து லட்சத்திற்கு அதிகமாக வருகின்றனர்.

திருப்பதி பாலாஜி கோவில் 1715ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக கடவுளுக்கு படைப்பது துவங்கியது என்றாலும் 1803இல் இருந்துதான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறை கோவிலில் தொடங்கியது. சுவாரசியமாக அன்று பிரசாதமாக பூந்தியை விநியோகம் செய்தனர். 1940 முதல் பூந்திக்குப் பதில் லட்டை பிரசாதமாக வழங்கத்துவங்கினர்

திருப்பதி பாலாஜி கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதனால் இந்த லட்டை வேறு யாரும் செய்து விற்க முடியாது.

திருப்பதி பாலாஜி கோவில் சுப்ரபாத சேவை – திருப்பதி வெங்கடாசலபதியை துயில் எழுப்ப சுப்ரபாத சேவை தினமும் செய்யப்படுகிறது. ஆனால், தனுர்மாசங்களான டிசம்பர்-ஜனவரியின் போது சுப்ரபாத சேவை செய்யப்படாது

திருப்பதி பாலாஜி கோவில் கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்துதான் பூமாலைகள், பால், நெய், இன்னும் பிற பூஜை சாமான்கள் கோவிலுக்கு வருகிறது. இன்னொரு பழக்கம் இங்கு இருக்கிறது; இந்த கிராமத்தை சேர்ந்தவரைத் தவிர வேறு யாரும் இங்கு சென்று தங்க முடியாது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad