ஸ்பரிசம் என்பது தம்பதி இடையே உறவின் போது காதலை வெளிப்படுத்தும் உன்னத ஒரு வழியாகும். ஆனால் தொடாமலேயே காதலை வெளிப்படுத்த முடியுமா?
ஆம் முடியும், உணர்வு பூர்வமான செய்கைகளினாலும் தங்களின் காதலை உணர்த்தி பெண்களின் உணர்ச்சிகளை வெளிகொண்டுவர முடியும்.
மலர்களின் வாசம் தரும் இதம்:
பெரும்பாலான பெண்களுக்கு பூக்கள் என்றாலே பிடிக்கும். அந்த பூக்கள் மூலம் பெண்மையை மலர வைக்க முடியும். ஒருவர் தன்னோட காதலை சொல்லாமல் இருந்தாலும் பூக்களே தானாக உங்களிடம் காதலை வெளிப்படுத்துவதும் மட்டும் இல்லாமல், பெண்களை சரியான மூடுக்கு கொண்டு வரும். கைகள் பேசும் மொழியை அந்த மலர்கள் பேசும் அப்புறம் தானாக மத்தது எல்லாம் அமையும் பாருங்களே.
துணையிடம் நெருக்கமாக அமருங்கள்:
துணையின் அருகில் நெருக்கமாக அமருங்கள், தொடவேண்டாம். கூந்தலையும், காதுமடலையும் லேசாக முகர்ந்து பார்த்தாலே போதும். உணர்ச்சி வசப்படத் தொடங்கி விடுவார்கள் பெண்கள்.
உங்களின் உணர்வுப்பூர்வமான இந்த நெருக்கம் தொடாமலேயே உங்களின் அதீத காதலை வெளிப்படுத்தும். இருவருக்குமிடையே அதிகமான நெருக்கத்தை அதிகரிக்கும் செய்யும்.
திராட்சை, ஸ்ட்ராபெரி:
காதலை வெளிக்கொண்டு வருவதில் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதில் திராட்சை மற்றும் ஸ்ட்ராபெரிக்கும் தனி பங்கு உண்டு. இந்த பழங்களைக் வைத்து பெண்களில் உதடுகளில் தீண்டலாம்.
கைகளால் தீண்டுவதை விட இந்த பழங்களினால் தொடுவது அதிக உணர்ச்சியை ஏற்படுத்துமாம். அதேபோல் சாக்லேட், கேக் கிரீம்களும், காதலின் உணர்வை வெளிப்படுத்தும் என்கின்றனர் ஆராய்சியா வல்லுநர்கள்.
இதமாக வருடுங்கள்:
பெண்களின் மென்மையான உடலை கைகளால் தொடுவதை விட பறவையின் இறகினால் லேசாக வருடுவது இதமான கிளு கிளுப்பை ஏற்படுத்தும். அவர்களின் அந்த கிளர்ச்சி ஆணின் உணர்வுகளையும் அதிகரிக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மென்மையான தோலினை மயில் இறகால் வருடும் போது ஏற்படும் உணர்ச்சிக்கு ஈடு இணையில்லை என்கின்றனர் அவர்கள்.
துணையை பேசியே உணர்ச்சியூட்டலாம்:
துணையை தொட்டுத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை. தங்களின் பேச்சிலேயே கூட கிறங்கடிக்கலாம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
காதலை சொல்ல நெருக்கமான ஒரு சூழலில் மென்மையான, ரகசியத்தைப் போல பேசும் பேச்சிலும் கூட கிளர்ச்சியூட்டலாம் என்கின்றனர்.
இந்த வழிமுறைகளை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். அப்புறம் என்ன நீங்கள் தொடவே வேண்டாம். உங்களுக்கு என்ன வேணும்னு நினைக்கிறீங்களோ அது வேண்டியது தானாகவே கிடைக்கும். அதுக்காக பெண்களின் விருப்பம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாம். அவர்களின் அனுமதி பெற்று செய்யுங்கள்.
பெண்களுக்கு காதல் மூடு வர வைக்க இதை எல்லாம் மறக்காம செய்யனுமாம்…!!
November 26, 2017
Tags