தேமலை மாயமாக மறைய செய்யும் சித்த வைத்திய முறை பற்றி தெரியுமா..?


இருமலும் சளியும் வாட்டி வதைக்கின்றதா? ஆங்கில மருத்துவத்தை விட சித்த வைத்தியம் சிறந்தது என்று எமது முன்னோர்கள் கூறுவார்கள்.

தேமல், வயிற்றுக்கோளாறுகள், விலா எலும்பு வலி, இளைப்பு நோய், நீர்க்கோவை இவ்வாறான பல நோய்களுக்கு மருந்தாகிறது திப்பிலி.

இது சளித்தொல்லைக்கும் சிறந்தவொரு நிவாரணமாகும். திப்பிலியின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்தும் அறியாத பல விடயங்கள் உண்டு.

திப்பிலி இருமல், களைப்பு, வயிற்று வலி, வாய்வு போன்ற பல பிரச்சனைகளை குணமாக்க வல்லது.

திப்பிலி பொடியினை தேனோடு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டை கமறல் சரியாகும்.

திப்பிலியை தூளாக்கி தேனுடன் கலந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் சரியாகும்.

திப்பிலி இளைப்பு நோய்க்கும் சிறந்தவொரு மருந்தாக காணப்படுகின்றது. திப்பிலி பொடியுடன் கடுக்காய் பொடியும் சம அளவு கலந்து தேனுடன் இலந்தை பழ அளவு சாப்பிட்டு வரவேண்டும். இதை நாள்தோறும் இரண்டு வேளை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பை நோய் குணமாகும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
திப்பிலியை சிறிதளவு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் பசியின்மை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad