வாஸ்துப்படி இந்த பொருட்களை பரிசாக கொடுக்கவோ வாங்கவோ கூடாது.. ஆபத்தாம்!!

பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்து கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் மிகச்சிறந்தது. ஆனால் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. அது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். வாஸ்து சாஸ்திரப்படி எந்தெந்த பரிசுகளை தரலாம் தரக்கூடாது என்பது பற்றி காண்போம்.

யானை பொம்மை
ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது சிறந்தது. உங்களால் வெள்ளி அல்லது தங்கம் பூசப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தர முடியவில்லை என்றால், வெங்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மைகளை பரிசாக தரலாம்.

துண்டுகள் மற்று கைக்குட்டை
துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறைப்பேர் பரிசாக தருகிறார்கள். ஆனால் இதனை வாஸ்து சாஸ்திரப்படி அன்பளிப்பாக தரக்கூடாது. இது கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள்
கடிகாரங்களை பரிசாக தரும் பழக்கம் அதிகப்படியானோருக்கு இருக்கிறது. ஆனால் இவ்வாறு கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறையாக வாழ்நாளை குறைப்பதாக அமைகிறதாம்.

கூர்மையான ஆயுதங்கள்
கத்தி போன்ற எந்த ஒரு கூர்மையான ஆயுதங்களையும் பரிசாக தரக்கூடாதாம். இது கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இருவருக்கும் கெடுதலை உண்டாக்கும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

மண்ணால் ஆன பொருட்கள்
இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்கள் போன்ற மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பது வாழ்நாள் மற்றும் பணத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

காலணிகள்
காலணிகளை தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். சூக்களை கூட பரிசாக வழங்க கூடாது என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வேலை சம்பந்தமான பொருட்கள்
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்கள் வேலை திறனை குறைக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால், பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்க கூடாது.

வெள்ளி
வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லக்ஷ்மியை குறிக்கும்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள்
தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் அதாவது மீன் தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தருவது நமது அதிஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad