பூண்டை அதிகம் சாப்பிட்டால் பார்வை இழப்பை சந்திக்க நேரிடும்!! கட்டாயம் பகிருங்கள்

பூண்டு மருத்துவ குணங்கள் மிக்கது என்பதற்காக அதை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதனால் ஏராளமான தீமைகளை சந்திக்க நேரிடும்.

பூண்டு அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

பூண்டில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் உள்ளது, எனவே அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் அதிகமாக பாதிப்படையும்.

பூண்டில் இருக்கும் வேதிப்பொருள் ரத்தத்தில் கலந்து, அது வாய்வாக மாறி, துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

பூண்டு அல்லது பூண்டு அதிகம் கலந்த உணவினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது வாந்தி மற்றும் நெஞ்சில் எரிச்சலை ஏற்படுத்தும்.

உணவில் பூண்டை அதிகம் எடுத்துக் கொண்டால், ரத்தோட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தம் உறையும் நேரத்தினை அதிகரிக்க செய்யும். இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளயிருப்பர்கள், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பூண்டு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

பூண்டில் உள்ள நுண்ணிய தாதுவான ஆலின் லயேஸ், சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பூண்டு மிக அதிகமாக உடலில் சேரும் போது, அது ஹைப்ஹீமா (hyphema) எனும் பாதிப்பை உண்டாக்கி, கண்களுக்கு உள்ளே இருக்கும் சேம்பரில் ரத்தக்கசிவை உண்டாக்கி, பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad