உங்கள் அருகில் கெட்டசக்தி இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் இவை தான்!

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு எனர்ஜிகள் தான் உங்கள் வெற்றி, தோல்வியை தீர்மானம் செய்கின்றன.நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி இருக்கிறது.

திடீரென நீங்கள் சில சாதாரண விஷயங்களை மிக தவறாக யூகிக்க துவங்குவீர்கள். ஏன் சோர்வாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கு உங்களிடமே காரணம் இருக்காது. “ஏன்னு தெரியல, ஒரு மாதிரி இருக்கு…” என உங்களை சுற்றி இருப்பவரிடம் கூறிக் கொண்டே இருப்பீர்கள். நெகடிவ் எனர்ஜியை குறைத்து, பாசிடிவ் எனர்ஜியை பெற தான் கோவிலில் செப்பு தகுடுகள் பதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி எனப்படும் கெட்ட சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? இதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது..

வரவு, செலவு!
உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுவாகும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு கண்டுகொண்டிருக்கும். பண வரவு செலவில் தடங்கல்கள் காண்பீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் வர வேண்டிய பணமும் வராது. உங்களை சுற்றி தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.கையறுநிலை! எப்போதுமே கையில் எதுமே இல்லை என்ற நிலை இருக்கும். நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுவீர்கள்.

அன்றாட வாழ்வில் ரோலர் கோஸ்டர் போல நிலை மேலும், கீழுமாய் தொங்கிக் கொண்டிருக்கும். நிம்மதியான உறக்கம் இன்றி காணப்படுவீர்கள்.அழுத்தம்! உங்களது அன்றாட வேலைகளில் கூட கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் ஒரு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அவ்வேலை தவறான பாதையில் திரும்புவது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இவையெல்லாம் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருப்பதை வெளிபடுத்தும் அறிகுறிகளாகும்.

தொற்று!
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு ஏற்படும். இதனால் மிக எளிதாக நோய் தொற்று பரவும். சாதாரண காலநிலையில் கூட உங்கள் உடல்நல ஆரோக்கியம் சீர்கெடலாம். இயல்பாக உடல்நலம் குன்றும் போது நீங்கள் காணும் சோர்வை காட்டிலும், அதிக சோர்வு தென்படும்.

தொடர்பு! காரணமே இன்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் மீது நெருக்கமான அன்பு கொண்டுள்ளவர்கள் கூட, உங்கள் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமல் அதை பெரிதுப்படுத்தி மனம் புண்படும்படி பேசுவார்கள். இதனால் தேவையற்ற சண்டை, பிரச்சனைகள் கூட உருவாகலாம்.

உறக்கம்! உங்கள் உறக்கம் கெடும். வித்தியாசமான கனவுகள் வரும். அடிக்கடி இரவில் விழிப்பு வரும். உங்கள் வாழ்க்கை கடினமாவது போன்ற உணர்வு தென்படும். உறக்கத்தின் போது, உங்கள் ஆழ்மனம் உங்களிடம் எதையோ தெரிவிக்க, எச்சரிக்க தூண்டும். எதோ தவறாக செல்கிறது என்ற உணர்வு உங்கள் மனதினுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.

மறதி!
சாவி, பணம், பர்ஸ், உடை என அன்றாட வாழ்வில் மிக சாதாராணமான விஷயங்களை கூட நீங்கள் மறக்க ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சூழலும் ஏற்படலாம். உங்கள் கண் முன்னேவே இருந்தாலும், வேறு இடங்களில் தேடி, உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்ஒருநிலைப்படுத்துதல்! இதற்கான தீர்வு, நீங்கள் முதலில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்கள் மனதின் கவனம் சிதறுவது தான் ஏனைய அத்தனை பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.

தினமும் தியானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரியாக பிரித்து, ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயற்படுங்கள்பொறுமை! யார் உங்களை வேகப்படுத்தினாலும், கோபப்படுத்தினாலும் அதை மனதிற்குள் ஏற்றாமல். பொறுமையாக செயற்பட துவங்குங்கள். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், உங்கள் பொறுமையை இழக்கு செய்துதான் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும்.

எனவே, பொறுமை மிகவும் முக்கியம்.அன்பு! முக்கியமாக அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதே நீங்கள் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலை கட்டுக்கொள் கொண்டு வந்துவிட்டாலே உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளை எளிதாக வீழ்த்தி விடலாம்.

மேலும், கெட்ட சக்தியின் பிடியில் நீங்கள் அகப்படும் போது, அது முதலில் உங்கள் உறவுகளை தான் கொல்லும். எனவே, அதனால் உங்கள் உறவுகள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இது, நீங்கள் எளிதாக கெட்ட சக்திகளின் படியில் இருந்து வெளிவர உதவும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad