யாழ் பஸ் நிலையத்தில் இளம் பெண்ணை தறதறவென இழுத்துச் சென்ற இளைஞன்.


யாழ் பஸ் நிலைய பகுதியில் 21 வயது யுவதியை தறதறவென இழுத்துச் சென்ற இளைஞன் ஒன்றரை வருட காதல் முன்னாள் காதலுடன் யுவதி சந்திப்பு இன்னாள் காதலனை கண்டு தலை தெறிக்க ஓடிய முள்ளாள் காதலன்

யாழ் பஸ் நிலைய பகுதியில் 21 வயது மதிக்கத்தக்க இளம் யுவதியை ஒருவருவரை 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சற சறவென இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே பஸ் நிலையத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் இளைஞனை நிறுத்தி விசாரணையை மேற்கொண்டனர்.

இளைஞர் கூறியதாவது தான் கடந்த ஒன்றரை வருட காலமாக யுவதியை காதலித்து வருவதாகவும் தானும் யுவதியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் யுவதி சில ஆண்டுகள் முன்பு வேறொரு இளைஞரை காதலித்து வந்துள்ளார் அவருக்கும் யுவதிக்கும் காதல் முறிவடைந்த பின்பே தம்மை காதலித்து வந்தார் என கூறினார்.

இந்நிலையில் இன்று யுவதி தமது முன்னைய காதலனை சந்தித்து உரையாடுவதை தனது நண்பர்கள் இரகசியமாக தெரிவித்ததை அடுத்தே தாம் இவ்விடத்துக்கு வந்ததாகவும் கூறினார்.

யுவதியும் முன்னாள் காதலரும் சந்தித்து பேசியதை கண்ட காதலர் சத்தமிட்டவாறு முன்னாள் காதலரை தாக்க ஓடினார் முன்னாள் காதலர் கண்டதும் ஓட்டம் பிடித்து தலைமறவாகினார்.

இதனையடுத்து யுவதிக்கும் அவரது இன்நாள் காதலருக்கும் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது

அப்பகுதியில் ஒன்று சேர்ந்த மக்கள் இருவரையும் அவ்விடத்தை விட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad