நடு வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண். நடந்தது என்ன?

கொழும்பில் நடு வீதியில் நிர்வாணமாக ஓடிய இளம் பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

போதைப்பொருள் கடத்தல்காரியொருவரே, பொலிசாரிடமிருந்து தப்பிக்க இந்த உத்தியை கையாண்டுள்ளார். எனினும், அவர் பின்னர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த சில தினங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

மதியப் பொழுதில், அதிக ஆள் நடமாட்டம் மிக்க சமயத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் இளம் பெண்ணொருவரும், அவரது கணவரும் போதைப்பொருள் விற்பனைக்காக சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.

அவர்களிடம் போதைப்பொருள் இருக்கும் விடயத்தை அறிந்த பொலிஸ் குழுவொன்று அவர்களை சுற்றிவளைத்தது. சோதனையின் போது, கணவனிடம் இருந்து சில போதைப்பொருள் பக்கட்கள் மீட்கப்பட்டன. மனைவியிடமும் போதைப்பொருள் இருப்பதை அறிந்த பொலிசார், அந்த பெண்ணை கைது செய்ய முயன்றனர்.

எனினும், பொலிசாரின் பிடியிலிருந்து தப்பிக்க தனது ஆடைகள் அனைத்தையும் களைந்து நிர்வாணமான பெண், சனக்கூட்டம் மிக்க வீதியினால் தப்பியோடினார். சுற்றிவளைப்பிற்கு வந்த பொலிஸ் அணியில் பெண் பொலிசார் இல்லாததால், அந்த பெண்ணை கைது செய்ய முடியாத நெருக்கடியில் இருந்த பொலிசார், போதைப்பொருள் கடத்தல்காரிக்கு பின்னாலேயே ஓடிச் சென்றனர்

இந்த காட்சியை நகரிலிருந்த பலர் வீடியோ பதிவு செய்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, பெண் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இதற்குள் நகரிலுள்ள சில பெண்களின் துணையுடன் நிர்வாணமாக தப்பியோடிய இளம்பெண்ணை பொலிசார் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவருக்கு ஆடை அணிவிக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த காட்சிகளே இணையத்தில் பரவி வருகிறது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad