ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் நகரில் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இன்று கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக சம்பிரதாயத்தில் இருக்கும் நடைமுறையின் அடிப்படையில் ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா ஆகியோரின் மகளான எட்டு வயது மௌனிகா உடன் வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் நடத்தப்பட்டது.
இந்த கோவில் கல்யாண உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் நடைபெறுவது வழக்கம். கோவில் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதி தாலி கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் தொட்டு, பின்னர் உற்சவரின் திருவடியில் வைத்து ஆசி பெற்று சிறுமியின் தாயிடம் கொடுத்தார்.
தொடர்ந்து சிறுமியின் தாய் ஜெயம்மா தன்னுடைய மகள் கழுத்தில் தாலி கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பிரசன்ன வெங்கடேஸ்வரர் கல்யாண உற்சவத்தின் போது மணமகளாக இடம்பெறும் சிறுமிக்கு மிக சிறப்பான இல் வாழ்க்கை அமையும் என்பது அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.