பெருஞ்சீரக தேநீர் பல நன்மைகளை கொண்டது என உங்களுக்கு தெரியுமா? பெருஞ்சீரக தேநீர் மூலம் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்ப்போம்
இது ஒரு நறுமண விதையாகும். இந்தியாவில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்தியாவில் சோம்பு என அழைக்கப்படும் இந்த தாவரம் பல நூற்றாண்டுகளாக மருத்துவ தாவரமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பழுப்பு நிற விதைகளை உலர்த்தி பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளை தரும் தேநீரை தயாரிக்கலாம். அதிக மக்கள் பெருஞ்சீரகத்தை சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பெருஞ்சீரக தேநீரின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.
பெருஞ்சீரக தேநீரின் நன்மைகள்
வைட்டமின் எ, பி, சி, மற்றும் டி, அமினோ அமிலங்கள் மற்றும் ஏராளமான சத்துக்கள் மற்றும் சுகாதார நன்மைகள் கொண்ட உணவாக பெருஞ்சீரகம் உள்ளது. இதனால்தான் நமது நாட்டில் பெருஞ்சீரகம் உணவின் ஒரு அங்கமாக உள்ளது
உடல் எடை குறைப்புக்கு
அதிகமான எடையில் இருப்பவர்கள் உங்கள் கூடுதல் எடையை குறைக்க விரும்பினால் உங்களுக்கு உதவ கூடிய சில விஷயங்கள் இங்கு உள்ளன. பெருஞ்சீரக தேநீர் குடிப்பது எடை இழப்புக்கு நன்மை பயக்கும். மேலும் செரிமானத்தை ஆரோக்கியமாக்கும். மேம்பட்ட செரிமானம் என்பது குறைவான பசி எடுப்பதற்கு வழி வகுக்கும். எனவே எடை இழப்பிற்கு இது உதவி செய்யும். மேலும் இது உடலில் இருந்து அதிகப்படியான அளவில் திரவம் மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்திக்கு
முன் எப்போதையும் விட நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இப்போது நாம் உள்ளோம். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழி என்றால் அது சரியான உணவுகளை உட்கொள்வதுதான். பெருஞ்சீரக தேநீர் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
பெருஞ்சீரகத்தில் வைட்டமின் சி என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மட்டுமின்றி இதில் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன.
செரிமான பிரச்சனை
சில சமயம் விருந்தோம்பலுக்கு பிறகு கொடுக்கும் தாம்பூலத் தட்டில் பெருஞ்சீரகம் இருப்பதை காணலாம். ஏனெனில் பெருஞ்சீரகத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. அவை தசைகளை தளர்த்தவும் பித்த ஓட்டத்தை தூண்டவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இது செரிமான மண்டலத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதனால் பெருஞ்சீரகம் ஒட்டு மொத்த செரிமான செயல்பாட்டையும் மேம்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரக தேநீர் குடிப்பதால் குடலில் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
கீல்வாதத்தை போக்க
அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற மூலிகைகளில் பெருஞ்சீரகமும் ஒன்றாகும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இது வீக்கத்தின் அளவை குறைக்கிறது. மேலும் கீல்வாதம் வரும் அபாயத்தையும் தடுக்கிறது. கில்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் பண்புகளும் இதில் உள்ளன.
நீரிழிவை நிர்வகிக்க
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருஞ்சீரகம் நன்மை பயக்கிறது என ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறைந்த அளவில் க்ளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எவ்வாறு குறைக்கிறது என்பதை பொறுத்து இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு பெருஞ்சீரகம் உதவியாக இருக்கும்.
பெருஞ்சீரக தேநீர் தயாரிக்கும் முறை
பெருஞ்சீரக தேநீரை எப்படி செய்வது என்பது அநேக பேருக்கு தெரியாமல் இருக்கலாம். ஒரு கப் தண்ணீரை எடுத்துகொண்டு அதில் அரை ஸ்பூன் பெருஞ்சீரக விதைகளை சேர்க்கவும். பிறகு 10 நிமிடம் வேக வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி 10 நிமிடங்கள் கழித்து அதில் அரை எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலக்கவும். இப்போது பெருஞ்சீரக தேநீர் தயார்.