ஆன்லைன் வகுப்பின் மூலம் ஏற்பட்ட காதலால், ஆசிரியை ஒருவர் மாணவனுடன் எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
கொரோனாவின் நோய் தொற்று காரணமாக கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையல் ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காணாமல் போனதாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்களது புகாரில் 17 வயதான மகன் தேஸ்ராஜ் காலனியில் உள்ள ஆசிரியரின் வீட்டில் தினமும் 4 மணி நேரம் பாடம் கற்றுக்கொள்ள செல்வது வழக்கம். இந்நிலையில் பாடம் கற்க சென்ற தனது மகன் வீடு திறம்பவில்லை என்று கூறியுள்ளனர்.
குறித்த ஆசிரியை கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆசிரியையும் காணாமல் போனது அம்பலமான நிலையில், பொலிசார் இருவரையும் தேடி வருகின்றனர்.
மேலும் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு சென்ற இருவரும் பணம், நகை என்று எதையும் எடுத்துச்செல்லவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அவர்களின் மொபைல் போன் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.