பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 15 வயதான சிறுமியை பா லியல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்து 35 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கை.து செய்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த 3 மாதங்களில் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுமியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ய சந்தேக நபர் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு – கல்கிசை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த மோசடி நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேக நபர் தெல்கொட பகுதியில் வசிக்கும் தாயிடமிருந்து சிறுமியை அழைத்துச் சென்றதாகவும், இது குறித்து அந்தப் பெண் அளித்த அறிக்கையையும் பொலிஸார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.