தம்பிலுவில் இளங்கோ வீதியில் பெரியம்மாவின் அரவணைப்பில் வசித்து வந்த சந்திரமோகன் கீர்த்திகா எனும் யுவதியே இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த யுவதியின் பெற்றோர் மத்திய கிழக்கில் தொழில் புரிந்து வருகின்றனர் . குறித்த யுவதியும் அவரது தங்கையும் அம்மாவின் சகோதரியின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளனர் .
இன்று காலை இறந்த யுவதியின் தங்கை அறையினை திறந்து பார்த்த போது தனது அக்கா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.திலகரத்ன மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்