காதலிக்க மறுத்த சட்ட கல்லூரி மாணவியை வீடு புகுந்து 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். பொம்மைக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு திருஷ்யா (21), தேவஸ்ரி (13) என 2 மகள்கள். இதில் திருஷ்யா எல்எல்பி படித்து வந்தார். தேவஸ்ரி 7ம் வகுப்பு படித்து வருகிறார். திருஷ்யாவுடன் 12ம் வகுப்பு படித்த முட்டுங்கல்லை சேர்ந்த வினீஷ் வினோத் (21) என்பவர் அவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். இந்த காதலை திருஷ்யா ஏற்றுக் கொள்ளவில்லை.
இருப்பினும் வினோத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து திருஷ்யா தனது தந்தையிடம் கூறினார். அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வினீஷை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசந்திரனின் கடையில் தீ பிடித்து உள்ளது.
இதை பார்க்க அவர் சென்றார். திருஷ்யா, தேவஸ்ரி இருவரும் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அறைக்குள் புகுந்த வினீஷ், திருஷ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த திருஷ்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தடுக்க வந்த தேவஸ்ரிக்கும் கத்தி குத்து விழுந்தது. இதனையடுத்து, இவர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவஸ்ரியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால் பயந்து போன வினிஷ் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.