தனது உறவுக்காரர் ஒருவர் மூலம், பிரமிட் பண மோசடிக் கும்பல் ஒன்றின் வலையமைப்பில் தொழிற்படும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் வட்சப் இலக்கத்தை பெற்றுள்ளார் குறித்த இளைஞன்.
பிரமிட் வலையமைப்பின் இலங்கையின் குளோபல்லைப் லங்கா என்ற ஒரு போலி நிறுவனத்தில் பிரான்ஸ் இளைஞனையும் குறித்த பெண் அங்கத்தவராக சேர்ந்துள்ளாள். அதன் பின்னர் பெண்ணும் இளைஞனும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குமான தொடர்பு பாலியல் ரீதியானதாக மாறியதாகத் தெரியவருகின்றது. குறித்த வவுனியா அன்ரிக்கு 27 வயதில் கலியாணம் கட்டிய மகளும் இருக்கின்றார். இந் நிலையிலேயே இவர்கள் பாலியல் ரீதியில் வட்சப்பில் தொர்பு கொண்டு வந்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் பிரான்ஸ் இளைஞனின் நிர்வாணப் புகைப்படங்கள் வேறு ஒரு இலக்கத்தில் இருந்து அவனுக்கு வட்சப் மூலம் அனுப்பப்பட்டு சமூகவலைத்தளத்தில் பிரசுரிப்போம் என கூறி அச்சுறுத்தி பெருமளவு பணமும் இளைஞனிடம் பறிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படங்களை யாருக்கு அனுப்பியது என்பது இளைஞனுக்கு தெரிந்து அது தொடர்பாக அந்த அன்ரியிடம் கேட்ட போது தனது தொலைபேசி திருட்டுப் போய் விட்டது. அதிலிருந்தே குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.