வரும் விபச்சார கலாசாரம் குறித்து பெரும் அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையால் இளம் தலைமுறையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பெருமளவு சீர்கெடும் நிலைமைகளுக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் விடுதிகளில் இடம்பெற்று வந்த இந்த விபச்சாரத் தொழில், பொலிஸாரால் சுற்றி வளைக்கப்படுவதால் நவீன முறையில் நடமாடும் விபச்சார விடுதிகளாக சூட்சுமமான முறையில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முச்சக்கரவண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், இவற்றுக்கு அடிமையானோர் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு முச்சக்கர வண்டிகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு விபச்சாரத்துக்கு அடிமையாளோரிடம் அதிகமான தொகை கறக்கப்படுவதாகவும், இவ்விடயத்தில் இளம்பராய இளைஞர்களுடன் பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதும் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.