மற்ற காலங்களை விட, கோடையில் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சி அதிகமாக இருக்கும், எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு, அவ்வப்போது காய்கறி மற்றும் பழங்களை சாலட் போன்று செய்வது மிகவும் இன்றியமையாதது.
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியில் அதிக நீர்ச்சத்து நிரம்பியுள்ளது, இவை இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இரண்டையும் ஒன்றாக சாலட் செய்து சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?
வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இருக்கின்றது, இவை இரண்டின் செரிமான நேரம் வேறு.
ஒன்று விரைவாகவும், மற்றொன்று குறைவாகவும் செரிமானம் ஆகும், எனவே இவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி சாப்பிட்டால், வாயு, வீக்கம், வயிற்று வலி, குமட்டல், சோர்வு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.
எனவே வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை அவற்றை ஒன்றாக சாப்பிடுவதை தவீர்க்க வேண்டும்