யாழில் வாய்பேச முடியாத பெண்ணையும் விட்டு வைக்காத திருட்டு காவாலிகள்.

யாழ்.குப்பிழானில் தனித்து வாழ்ந்து வந்த வாய் பேச முடியாத பெண்ணின் தங்கச் சங்கிலி, பணம் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் அண்மையில் குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியில் இடம்பெற்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் குறித்த பெண் தனித்து வாழ்ந்து வரும் நிலையில் இரவு வேளையில் வீட்டின் மதிலேறிப் பாய்ந்து பின்னர் வீட்டின் மலசலகூடத்தின் மேற்பகுதியில் வெளிச்சம் செல்வதற்காகத் திறந்து விடப்பட்டுள்ள சிறு பகுதி ஊடாக உள்ளிறங்கி வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பவுண் தங்கச் சங்கிலி மற்றும் குறித்த பெண் கஷ்டப்பட்டுச் சேமித்து வைத்திருந்த ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருடர்கள் மேற்படி வீட்டிற்குத் திருடச் சென்ற போது வீட்டு வளவுக்குப் பின்புறமாக அமைந்துள்ள பகுதியில் சிசிரிவிக் காணொளியில் பதிவாகியுள்ள போதும் இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய திருடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.,

இதேவேளை, சமுர்த்தி உதவிக் கொடுப்பனவு மூலம் சேர்ந்த பணம், கூலி வேலை செய்து கஷ்ரப்பட்டுச் சேர்த்த பணம் உள்ளிட்ட பணமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad