பொத்துபிட்டிய - ரக்வானை பிரதேசத்தில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் நான்கு ஆண் மாணவர்களை பாலியல்
துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயது திருமணமாகாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் 11 முதல் 13 வயதுக்குட்பட்ட அவரது பாடசாலையை சேர்ந்த ஆண் மாணவர்கள்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் நடத்தைகளில் மாற்றத்தைக் கண்டறிந்த பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்திருந்தனர். விசாரிக்கப்பட்டபோது, குழந்தைகள் பாடசாலை அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை வெளிப்படுத்தினர்.
பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் சந்தேக நபரை ரக்வான போலீசார் கைது செய்தனர்.
மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கஹாவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், சந்தேகநபர் பெல்மடுல்ல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ரக்வான காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.