குறித்த சம்பவம், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,
இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாயிலில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருடன் வீதியில் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் இது கைகலப்பாக மாறியது.
இந்த நிலையில் ,பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, பாதுகாப்பு உத்தியோகத்தரை அந்த நபர் தாக்கியதாகவும், பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.