பிரசவம் ஒன்று. குழந்தை பத்து. உலக சாதனை.

பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருவரே, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, குறித்த உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை, இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் இவர் கர்ப்பம் தரித்துள்ளார். 

கடந்த 7ஆம் திகதி பிரசவவலி ஏற்பட்டதையடுத்து, பிரிட்டோரியா நகரி்ல் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் என 10 குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும், இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். 

இந்நிலையில், இதுதான் இப்போது உலக சாதனையாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad