அண்ணாவை என் கண் முன்னே அடித்து கொன்றார்கள். தங்கை தகவல்.

நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த 21 வயது மதிக்கத்தக்க சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார் .

எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .

மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும். கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் இவர்கள் அனைத்தையும் மூடி மறைக்க பார்க்கின்றனர் உண்மை ஜெயிக்க வேண்டும்என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் 4 ஜஸ் போதைப் பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad