அகதியாக சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் கணவனின் இரு நண்பர்களால் பாலியல்வல்லுறவு!!

இலங்கையிலிருந்து அகதியாக சென்ற இளம் குடும்பப் பெண்ணொருவர், கணவரின் நண்பர்களால் அடுத்தடுத்து இரண்டு நாள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமிழகத்தின், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் 34 வயது பெண். குடும்ப தகராறு காரணமாக இவர் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு இந்த பெண் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டீபன் என்பவர் போதையில் இவரது வீட்டு கதவை தட்டினார். 

இந்த பெண் கதவை திறந்ததும் காண்டீபன் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து காண்டீபன் தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார். 

இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் திகதி இரவு இந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அந்த பெண்ணை ஆண்ட்ரிஸ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து காண்டீபன் மற்றும் அவரது நண்பர் ஆண்ட்ரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad