மீண்டும் வெள்ளைவான் கடத்தல். இன்று அதிகாலை பதற்றம்

இலங்கையில் மற்றுமொரு வெள்ளை வான் கடத்தல் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவச் சீருடைக்கு ஒப்பான சீருடையில் வெள்ளை வானில் வந்த கும்பலொன்று தனது கணவரை கடத்திச்சென்று கடும் தாக்குதலை நடத்திவிட்டு இடைநடுவே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றிருப்பதாக தாக்குதலுக்கு உள்ளான நபரது மனைவி முறையிட்டிருக்கின்றார்.

குறித்த நபரை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட வான் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தமிழர் ஒருவரே இவ்வாறு கடத்திசெல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad