தந்தை கண்டித்ததால் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று மொனராகலை மக்கலுகொல்ல நெவ்கல பிரதேசத்தில் நடந்துள்ளது.
10 ஆம் ஆண்டியில் பயிலும் 15 வயதான திலினி நிஷார பெண் சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கல்வியை கற்குமாறு தந்தை அண்மையில் இந்த சிறுமியை கண்டித்துள்ளார். இதன் பின்னர் அந்த சிறுமி விஷம் அருந்தியுள்ளார்.
விஷமருந்திய சிறுமி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்
பாடங்களை படிக்குமாறு தந்தை கண்டித்தன் காரணமாக சிறுமி விஷம் அருந்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மக்கலுகொல்ல பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.