ஸ்பெயின் நாட்டில் ஆடையில் பாலின பாகுபாடை எதிர்த்து ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு பெண்கள் அணியும் ஸ்கேட் ஆடையை அணிந்து வந்த சுவரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வெலோடோலிட் என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் மிக்கேல் கோம்ஸ் என்ற 15 வயது சிறுவனம் ஆடைகளில் பாலின பாகுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக பெண்கள் அணியும் ஸ்கேர்ட்டை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான்.
இதை சற்றும் எதிர்பாராத நிற்வாகம் அவனை கட்டாயப்படுத்தி ஒரு மனநல மருத்துவருடன் ஆலோசிக்க வைத்ததுடன் அந்த சிறுவனை பள்ளியிலிருந்து நீக்கியது. இதை விளக்கமாக கூறி அந்த சிறுவன் டிக்டாக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆடை ஏன் பாலின பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்? என்பது குறித்சது விவரமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த வீடியோ வைரலாக பரவியது.
பலர் அந்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த பள்ளியின் ஆசிரியர்களும், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களுமே அச்சிறுவனிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
சிலர் அந்த பள்ளிக்கு ஸ்கேட் அணிந்து வந்து அந்த சிறுவனிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது அப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மேனுவேல் ஓர்டிகா, போர்ஜா வேலுக்ய்யோஸ், ஜோஸ் பினாஸ் உள்ளிட்டோர் சமீபத்தில் பள்ளிக்கு பாடம் எடுக்க செல்லும் போது ஸ்கேட் அணிந்து சென்றுள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் #ClothesHaveNoGender என்ற ஹேஷ் டேக்கும் தற்போது உலக அளவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது.