இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது.😭

இன்று (11.06.2021) நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன சந்தைப்படுத்தல் தலைமைக் காரியாலயத்தினால் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

பெற்றோல் 92 ஒக்ரைன் – 157 ரூபாய் பெற்றோல் 95 ஒக்ரைன் – 184 ரூபாய்
டீசல் – 111 ரூபாய்
சுப்பர் டீசல் – 144 ரூபாய்
மண்ணெண்ணெய் – 77 ரூபாய்

ஆகவே, மேற்கூறப்பட்ட விலை மீள்திருத்தத்திற்கு அமைவாக தங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் இந்த எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊடக அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad