இந்த காக்கா பிடிக்கும் கதை தற்போது மாகாணசபை அலுவலகத்தில் சந்தி சிரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் ஓய்வு பெறவுள்ள நிலையில் அடுத்த பிரதம செயலாளர் பதவிக்கு இப்போதே பலர் பலருடைய அலுவலக படி தொடக்கம் வீட்டு படிவரை ஏறி இறங்குவதாக தகவல்கள் வெளியுள்ளது.
அதற்கிடையில் தற்போதைய பிரதம செயலாளருக்கே ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வடமாகாண திணைக்களம் ஒன்றின் அதிகாரி அரசுக்கு சொந்தமான வாகனத்தை பயன்படுத்தி மாகாணத்தின் உயர்நிலை அதிகாரியை குளிர்ச்சிப்படுத்த கொழும்புக்கு பலாப்பழம் அனுப்பியுள்ளார்.