யாழ்.பாசையூர் மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது முண்டியடித்த சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பயண தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்வாறு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளனர்.
இதன்போது சிலர் சமூக இடைவெளிகளை பேணாதும், முகக்கவசங்களை சீராக அணியாமலும் பொறுப்பற்ற விதத்தில் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.