Zoom வகுப்பும் ஏழை தொழிலாளியின் பிள்ளையும். கண் கலங்க வைக்கும் சம்பவம்.


இந்தப் பதிவு கொரோனா தொற்று நிலைமையில் லோக் டவுண் கால கட்டத்தில் ஏழை பிள்ளையின் நிலையை மையமாக வைத்து வரையப்படும் உண்மைச் சம்பவம்.

எங்கட அப்பா கூலித் தொழில் தான் செய்றவர்.ஒரு நாளைக்கு 800 ரூபாய் சம்பளம்.இது
எல்லா நாளும் இல்லை.காலையில 5 மணிக்கு எழும்பி பாணும் வாழைப்பழமும் வாங்கித் தந்திட்டு வேலைக்கு போவார்.வேலைக்கு போனா இரவு 7 மணியாகும் வீட்ட வாறதுக்கு.

எனக்கு ஒரு தம்பியும் தங்கச்சியும் .நான் 10 ஆம் ஆண்டு படிக்கிறன்.சகோதரங்கள் ஒரு ஆள் 4 ஆம் ஆண்டு மற்றவர் 7 ஆம் ஆண்டும் படிக்கினம்.நான் தான் வீட்ட மூத்த பிள்ளை.அம்மாக்கு உதவியா நான் வேலையும் செய்து குடுத்திட்டு தான் படிக்கணும்.

.இப்புடி இருக்கேக்க இப்ப நாட்டில் கொரோனா லொக் டவுண் .அப்பாக்கும் வேலை இல்ல. வீட்டுக்கு பக்கத்தில பெரிய பள்ளிக்கூடத்தில படிக்கிற பிள்ளை ஒராள் இருக்கா.அவா ஓட சேர்ந்து தான் பின்னேரத்தில படிக்கிறனான்.காசு குடுத்து டியூசனுக்கு போறதுக்கு எனக்கு வசதி இல்ல.

அப்பா எல்லா இடமும் கூலி வேலைக்கு போற படியா என்னால கொரோனா வந்திடுமாம் எண்டு என்னையும் அங்க வரவேண்டாம் எண்டு இப்ப சொல்லிட்டினம்.அந்த பிள்ளை என்னோட நல்ல மாதிரி.தனக்கு என்ன வாங்கினாலும் எனக்கும் வாங்கித் தருவா.

பள்ளிக்கூடத்தில எங்கட வகுப்பில 42 பிள்ளையள் படிக்கினம். நான் 7 ஆம் 8 ஆம் பிள்ளையா வருவன் .என்னட்ட போன் ஒண்டும் இல்லை.வீட்டில 2500 ரூபா போன் தான் இருக்கு..அதுவும் சார்ச் நிக்காது.அப்பா விறகு கொத்தப் போன இடத்தில அந்த வீட்ட வெளிநாட்டால வந்து நிண்ட அங்கிள் குடுத்தவர்.

இப்புடி நிலைமை இருக்கேக்க சூம் கிளாசுக்கு போன் வேணும் எண்டு நான் வீட்ட கேக்க மனசு வரேல்ல . ஒரு அமைப்பு மூலமா அவைட ஆண்டு விழாவ முன்னிட்டு ஊர்ல படிக்கிற பிள்ளையள் எண்டு சொல்லி 6 பேருக்கு 3 போன் அன்பளிப்பு செய்தவ.

இப்ப அப்பாக்கு வேலை சரியான குறைவு .ஒழுங்கைக்குள்ளால ஒளிச்சு தான் தோட்ட வேலைக்கு
போறவர் . இடைக்கிட.மரக்கறியள் இப்ப விக்கேலாது எண்டு சொல்லி 2 மரவள்ளி கிழங்கும் ஒரு பிடி கீரையும் 300 ரூபா காசும் கொண்டு வருவார்.ஒரு கிலோ அரிசி 120 ரூபா அது 2 நாளைக்கு காணும்.

விடிய அரிசில கஞ்சி செஞ்சு அம்மா தருவா.மதியம் அந்த கஞ்சிக்கு மிளகாய் வெங்காயம் வெட்டி போட்டு குடிப்பம்.இரவில மரவள்ளி கிழங்கு அவிச்சு சாப்பிடுவம்.மறுநாள் அப்பா வேலைக்கு போய் காசு கொண்டு வந்தா தான் 3 நேரம் சாப்பிடுவம். இப்புடி இல்ல எண்டா மதியம் கஞ்சி குடிசிட்டு இரவு அப்பா வரேக்க பாண் வாங்கி கொண்டு வருவார் அதை சாப்பிடுவம்.

இப்புடி தான் எங்கட வாழ்க்கை போகுது. அடுத்த வருஷம் எனக்கு ஓ எல் எக்ஸாம் .இப்பவே படிச்சா தான் அடுத்த வருஷம் நான் ஓ எல்க் பாஸ் பண்ணலாம்.எங்கட வீடு மட்டும் இல்லை இப்புடி என்ன மாதிரி நிறைய பேர் இருக்கினம்.

லோக் டவுண் ல சூம் கிளாஸ் எண்டு நிறை ரீச்சர்மார் தொடங்கி இருக்கினம்.முக்கிய 6 பாடங்களில கணிதம், ஆங்கிலம் ,விஞ்ஞானம் இந்த பாடங்கள் தவிர மிச்ச பாடம் எல்லாம் நிறைய பேர் இலவசமா தான் சூம் கிளாசில படிப்பிக்கினம்.

போனுக்கு டேட்ட போடணும்.100 ரூபாய்க்கு காட் போட்டா ஒருநாளில் இரண்டு நேரம் நாங்கள் சாப்பிடேலாது எங்களால .அத நான் ஒரு மாதிரி சமாளிக்கிறன்.ஆனா சில சூம் கிளாசுக்கு காசு கட்டினா தான் பாஸ்கோட் தருவினம்.அதுக்கு 500 ரூபாய் வேணும்.அதை நான் கட்டினா 2 நாள் எங்கட வீட்ட ஒரு நேரம் கூட சாப்பிடேலாது.

இலவசமா படிப்பிக்கிற நிறைய பேர் இருக்கினம் தானே அவைட கிளாஸ்ல படிக்கலாம் தானே எண்டு நீங்கள் கேட்பிங்கள்.எனக்கு எந்த கிளாஸ் விளங்குதோ அவைட கிளாஸ்ல தானே படிக்க முடியும்.லோக் டவுண் நேரத்தில அரசாங்க வேலை உள்ள எல்லாருக்கும் சம்பளம் அரசாங்கம் குடுக்குது.ரீச்சர் சேர்மாருக்கும் அரசாங்கம் சம்பளம் குடுக்குது தானே.ஏன் சில ரீச்சர் மார் மட்டும் இப்புடி செய்யினம்.எங்கள மாதிரி இன்னும் எத்தனை பிள்ளையள் இந்த நிலைமையில தான் இருக்கினம்.இந்த நிலைமை தொடர்ந்தா நாங்கள் படிச்சு பாஸ் பண்ண மாட்டம் எங்கேயும் வீட்டு வேலைக்கு தான் போக வேணும்.

ஏழையின் பசி தொடரும்………………
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad