பரிதாபமாக பலியான 13 வயது சிறுமி!

 


முஸ்கோகா ஏரியில் படகு விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான 13 வயது சிறுமிக்காக அஞ்சலி கூட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முஸ்கோகா ஏரியில் புதன்கிழமை இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நால்வர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

13 வயதேயான Quinn Cammaert என்ற சிறுமி சம்பவயிடத்திலேயே பலியானார். இவர்களுடன் விபத்தில் சிக்கிய 51 வயதான பெண்மணி மாயமான நிலையில், அவரது உடல் வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமி Quinn Cammaert என்பவருக்காக அஞ்சலி கூட்டம் ஒன்று உறவினர்களாலும் பள்ளி நிர்வாகத்தாலும் முன்னெடுக்கப்பட்டது. இதில் அவரது உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.  

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad