2 திருமணம் செய்த பெண்-3வது கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 

ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது கணவரையும் ஏமாற்றி சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், விஜயபுரம் மண்டலத்தைச் சேர்ந்தவர் சுனில். இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெடிங்க் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சுஹாசினி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவர்களும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் காதலித்த ஆரம்பத்தில் இருந்தே சுஹாசினி தனது குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறது எனக் கூறி அவரிடமிருந்து பல்வேறு நேரங்களில் லட்சக்கணக்கில் பணம் வாங்கி வந்துள்ளார்.

அதன்பின்னர், இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு சுனில் வேலைக்கு சென்றபிறகு சுஹாசினி அதே காரணத்தை கூறி சுனிலின் தந்தையிடமிருந்தும் ரூ. 2 லட்சம் வாங்கியுள்ளார். இந்த விஷயம் அறிந்து சுனில் சுஹாசினியிடம் சண்டையிட்டுள்ளார்.

அதன்பின், வீட்டில் யாருமில்லாதபோது, சுஹாசினி, சுனில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பித்துள்ளார். மேலும், சுஹாசினியின் ஆதார் அட்டையில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது, சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில், தான் ஏமாற்றப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் சுஹாசினி ஏற்கனவே வினய் என்பவரை திருமணம் செய்து கொண்டு பண மோசடி செய்ததாக வழக்கு ஒன்று பதிவாகியிருப்பது தெரியவந்தது.

இதனை அறிந்த சுனில் கடும் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக சுஹாசினியிடம் நடத்தப்பட்ட முதறகட்ட விசாரணையில் திருமணம் செய்து கொண்ட மூன்று பேரையும், இவர் ஒரே பாணியில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad