கணவரின் உயிருக்கு 24 மணிநேரம் கெடு விதிக்கப்பட்ட நிலையில் மனைவி செய்த காரியம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம் தம்பதிகள் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டு கனடாவில் வசித்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த நிலையில், அந்த பெண்ணின் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் நுரையீரல் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் மருத்துவர்களோ அவரின் உடல் நிலை மோசமாகி வருவதாக கூறி, இன்னும் 3 நாட்கள் மட்டுமே வென்டிலேட்டர் துணையோடு வைத்திருக்க முடியும் என கெடு விதித்துள்ளனர்.
திருமணமான ஓராண்டுக்குள் தனது கணவர் தன்னை விட்டு பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாத அந்தப்பெண் தனது கணவரின் விந்தணுவை எடுத்து, அதன் மூலம் ஒரு தாயாக மாற விரும்புவதாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டார்.
இந்த கோரிக்கை கணவரின் அனுமதியின்றி விந்து மாதிரிகளை எடுக்க முடியாது என்று கூறி மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. தனது மாமியார் மற்றும் அவர்களது உறவினர்கள் சம்மதத்துடன் தனது கணவரின் விந்தணுவை எடுப்பதற்காக குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றமும் வழக்கை 15 நிமிட விசாரணைக்கு பின்னர் உடனடியாக தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில், 'சம்பந்தப்பட்ட நோயாளியின் விந்தணுக்களை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.
இதனை மருத்துவமனை நிர்வாகம் முறையாக பாதுகாக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை அந்த பெண்ணுக்கு செயற்கை கருவூட்டல் முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த கூடாது.
இந்த விவகாரத்தை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரிக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த பேட்டியில், 'என் கணவரின் விந்தணுவிலிருந்து தாயாக வேண்டும்.
அவர் என்னுடன் இனி இருப்பது கேள்விக்குறி அவரின் நினைவாக என் பிள்ளை என்னுடன் இருக்கவேண்டும்' என விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவரின் விந்தணுக்களை எடுத்து பாதுகாக்க முடியுமா? என்பது குறித்தும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து குஜராத்தை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.