கொழும்பில் 30 வீதமானோருக்கு டெல்டா தொற்று!

 


கொழும்பு – தெமட்டகொட பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளில் 30 வீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இந்நிலையில் விசேட அனுமதி பெற்று இந்த பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தெமட்டகொட பிரதேசத்தில் 30 சதவீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள தரவினை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு மாவட்டத்தின் நிலைமையை மதிப்பிடுவது கடினமாகும்.

எனினும் எவ்வாறிருப்பினும் டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்கள் சமூகத்தில் நிச்சயம் காணப்படுவர் என்றும் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.

இன்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்   கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி இதனைத் தெரிவித்தார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad